ஆஸ்திரேலியாவை சேர்ந்த Alistair Blaske என்பவர் இறந்து 90 நிமிடங்கள் கழித்து உயிர் பிழைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
Alistair Blaske என்பவர் அவரது மனைவி மெலிண்டாவுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அவரது மனைவி தனது கணவர் காலை எழுந்துக்கொள்ளாமல் இருப்பதைக் கண்டும், பதிலளிக்காமல் இருப்பதை கண்டும் பதறிப் போய் உள்ளார்.
இதனையடுத்து அவரை எழுப்ப முயற்சித்த போது சுயநினைவு இல்லாமல் கணவர் இருந்துள்ளார். கணவருக்கு உடனே சிபிஆர் செய்துள்ளார் மெலிண்டா.
மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் 20 நிமிடங்கள் வரை தனது கணவருக்கு சிபிஆர் செய்துள்ளார் மெலிண்டா.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த மருத்துவர்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக சிபிஆர் முறையை செய்தனர்.
எந்த ஒரு அசைவும் இல்லாமல் இருந்த அவரின் இதயத்துடிப்பு 90 நிமிடங்களுக்குப் பிறகு செயல்பட்டதை மருத்துவர்கள் கண்டனர். இதனையடுத்து அவருக்கு உயர் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதுகுறித்து 61 வயதான Alistair Blaske கூறுவது;
இரவு படுக்கையறைக்கு சென்றது நினைவிருக்கிறது அடுத்த நாள் காலையில் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை.
எனக்கு அந்த 90 நிமிடங்கள் என்ன நடந்தது என்று நினைவில் இல்லை என்றார்.12 நாள் சிகிச்சைக்கு பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust