Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் - எங்கிருக்கிறது? வரலாறு என்ன?
Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் - எங்கிருக்கிறது? வரலாறு என்ன? twitter

Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் என்றழைக்கப்படும் ஒற்றை அறை கல்லறை - வரலாறு என்ன?

தாஜ் மஹாலின் பிரதி அல்லாத ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அதனை தென்னிந்தியாவின் தாஜ் மஹால் என்று அழைக்கின்றனர். இதுவும் ஒரு அரசனின் கல்லறை தான். தென்னிந்திய தாஜ் மஹால் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இல்லை என்றால், இந்த பதிவு உங்களுக்காக!
Published on

காதலின் சின்னம், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது தாஜ் மஹால். இன்றும் இதன் வனப்பு மாறாமல், இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்து பயணப்பிரியர்கள் வந்து கண்டு களிக்கின்றனர்

தாஜ் மஹாலை போல பல்வேறு இடங்களில் அதன் பிரதி கட்டிடங்கள் எழுப்பட்டுள்ளன. அவை யாவும் தாஜ் மஹால் போல் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இல்லை எனவும் சுற்றுலா பயணிகள் சொல்லியிருக்கின்றனர்.

ஆனால், தென்னிந்தியாவில், தாஜ் மஹாலை நினைவுப்படுத்தும், ஆனால் தாஜ் மஹாலின் பிரதி அல்லாத ஒரு நினைவுச்சின்னம் இருக்கிறது. அதனை தென்னிந்தியாவின் தாஜ் மஹால் என்று அழைக்கின்றனர். இதுவும் ஒரு அரசனின் கல்லறை தான்.

தென்னிந்திய தாஜ் மஹால் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இல்லை என்றால், இந்த பதிவு உங்களுக்காக!

கர்நாடகா மாநிலம் பிஜாபூர் என்ற நகரில் அமைந்திருக்கிறது இந்த அரச கல்லறை. இதன் பெயர் கோல் கும்பாஸ்.

அடில் ஷா வம்சத்து அரசன் முகமது அடில் ஷா. இவரது தந்தையின் மறைவுக்கு பிறகு 1627 ஆம் ஆண்டு அரசபதவி ஏற்றார். இவர் பிஜாபூரின் ஏழாவது அரசனாவார்.

இவருக்கு மிக இளம் வயதிலிருந்தே மரணத்தின் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. இவரது மரணத்திற்கு பிறகு சாதாரணமாக அடக்கம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் மன்னர் முகமது அதில் ஷாவுக்கு அதிகமாகவே இருந்தது. அதனால் உயிருடன் இருக்கும்போதே தனக்கான கல்லறைய எழுப்ப முடிவெடுத்தார் மன்னர்.

Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் - எங்கிருக்கிறது? வரலாறு என்ன?
Marie Antoinette: பிரெஞ்சு நாட்டின் கடைசி மகாராணி - கொல்லப்பட காரணம் என்ன? | Podcast

இந்த கல்லறை, அவரது தந்தை இரண்டாம் இப்ராஹிம் அடில் ஷாவின் கல்லறையான இப்ராஹிம் ரௌசாவை விட பிரம்மாண்டமானதாக இருக்கவேண்டும் என்று இவர் எண்ணினார்.

கோல் குமாஸ் பிரம்மாண்டமான ஒற்றை அறை கட்டிடமாக அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. இன்றுவரை, உலகின் மிகப் பெரிய ஒற்றை அறை கட்டிடம் இது தான். மன்னர் வாழ்ந்த காலத்திலேயே இதன் கட்டமைப்பு தொடங்கப்பட்டாலும், அவரது மரணத்திற்கு முன்னர் இது கட்டிமுடிக்கப்படவில்லை.

1656 ஆம் ஆண்டு மன்னர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். கோல் கும்பாஸ் முடிவடையாமல் இருந்த நிலையிலும், மன்னரின் கடைசி விருப்பமாக இருந்ததால், அவரை இந்த கட்டிடத்திற்குள் புதைத்தனர். பின்னர் கோல் கும்பாஸ் கட்டிமுடிக்கப்பட்டது.

சில காலத்திற்கு பிறகு முகமது ஷாவின் இரண்டு மனைவிகளான தாஜ் ஜஹன் பேகம் மற்றும் அரூஸ் பிபி, மற்றும் காதலி ரம்பா, மகள், பேரன் என அனைவருமே மரணித்த பிறகு இந்த கோல் கும்பாஸில் புதைக்கப்பட்டனர்

இந்த கல்லறை அரைக்கோள குவிமாடத்துடன் கூடிய ஒரு பெரிய க்யூப் கொண்டுள்ளது. கியூபின் நான்கு மூலைகளிலும் நான்கு எண்கோண (Octagonal) கோபுரங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஏழு தளங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, கோபுரங்களின் மட்டங்கள் ஆர்கேட்களால் ஆனவை. இவற்றிற்கு உள்ளே படிக்கட்டுகள் உள்ளன.

உட்புறம் இருக்கும் ஒற்றை அறையின் அளவு சுமார் 41 மீட்டர் அகலம் மற்றும் 60 மீட்டர் உயரம். சேம்பர் தளத்தின் மையத்தில் ஒரு உயர்ந்த மேடையில் முகமது அடில் ஷாவின் கல்லறை வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் அவரது பிற குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளையும் இங்கு உள்ளது.

Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் - எங்கிருக்கிறது? வரலாறு என்ன?
செளதி மன்னர் தெரியும், உலகை ஆளும், ஆண்ட இந்த 9 அரசர்கள் குறித்து தெரியுமா?

இந்த கல்லறைகளை அணுக, மேற்கு நுழைவாயிலின் கீழ் படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. முகமது அடில் ஷாவின் கல்லறை மரத்தால் மூடப்பட்டுள்ளது. இது கல்லறை வடிவமைக்கும் திட்டத்தில் இடம்பெறவில்லை. பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.

கல்லறை அடர் சாம்பல் நிற பாசால்ட் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதன் முகப்பு பிளாஸ்டரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குவிமாடம் (Dome) செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டுமானத்தின் போது, கோல் கும்பாஸ் இஸ்லாமிய உலகின் மிகப்பெரிய குவிமாடமாக இருந்தது.

கல்லறையின் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் இதன் கீழ் பகுதியில் அமைந்துள்ள கேலரி. இங்கு நான்கு கோபுரங்களில் உள்ள வளைந்த படிக்கட்டுகள் வழியாக செல்லலாம். இங்கு சிறியதாக சத்தம் போட்டாலும், அந்த கல்லறை முழுவதிலும் எதிரொலிக்கும் என்பதால், கோல் கும்பாஸ் விஸ்பரிங் கேலரி என்றழைக்கப்படுகிறது

கட்டிடக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல வரலாற்று நினைவுச்சினங்கள் பிஜாப்பூரில் அமைந்துள்ளன.

இவை பெரும்பாலும் அடில் ஷா வம்சத்தினர் ஆண்ட காலத்தில் தான் எழுப்பப்பட்டன. பிஜாப்பூர் கோட்டை, பாரா காமன், ஜமா மஸ்ஜித் மற்றும் கோல் கும்பாஸ் ஆகியவை அடங்கும். எண்ணற்ற கல்லறைகள், மசூதிகள், இந்த இடத்தின் பண்டைய சிறப்பிற்கு ஏராளமான சான்றுகளாக விளங்குகின்றன

Gol Gumbaz: தென்னிந்தியாவின் தாஜ் மஹால் - எங்கிருக்கிறது? வரலாறு என்ன?
கோஹினூர் : சபிக்கப்பட்ட வைர கல் அதிகாரத்தின் குறியீடு ஆனது எப்படி? - ஒரு சுவாரஸ்ய வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com