நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?

பசுபதிநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் கடைகள் அனைத்திலும் பல்வேறு விதமான ருத்ராட்ச மாலைகள் விற்கப்படுகின்றன. இது ருத்ராட்சத்திற்கென்றே புகழ்பெற்ற சந்தை.
நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?
நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?Twitter

நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டில் இருக்கிறது பசுபதிநாதர் கோயில். இது யுனெஸ்கோ பட்டியலில் இருக்கும் பாரம்பரிய தலம் என்பதைத் தாண்டி நேபாளின் மிக முக்கியமான இந்து மத வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. இந்தியாவுக்கு காசி விஸ்வநாதர் கோயில் எப்படியோ நேபாளுக்கு பசுபதிநாதர் கோயில் அப்படி.

இந்தக் கோயில் எந்த நூற்றாண்டில், யாரால் கட்டப்பட்டது என்பது குறித்த துல்லியமான தகவல் இல்லை. 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. 17ம் நூற்றாண்டில் நேபாள் மன்னன் பூபேந்திர மல்லா என்பவரால் இக்கோயில் புணரமைக்கப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உள்ளது.

பசுபதிநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இருக்கும் கடைகள் அனைத்திலும் பல்வேறு விதமான ருத்ராட்ச மாலைகள் விற்கப்படுகின்றன.

அனைத்துக் கோயில் வாசல்களிலும் பூஜைப்பொருட்கள் விற்பது வாடிக்கை என்றாலும் இது ருத்ராட்சத்திற்கென்றே புகழ்பெற்ற சந்தை. இக்கோயிலுக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் ருத்ராட்ச மாலைகளை வாங்கிச் செல்கின்றனர்.

பசுபதிநாதர் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். செம்பால் ஆன மிகப்பெரிய நந்தி சிலைதான் கோயிலின் முகப்பில் இருந்து பார்க்கையில் காட்சி தருகிறது. பகோடா என்கிற கட்டடக்கலை வடிவில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயிலின் வெளிப்புறத்தில் மரத்தில் புத்த மதத்தின் தாரா தேவி சிலையும், வெள்ளியால் போர்த்தப்பட்ட சுற்றுப்புறத்தில் புத்தர் உருவமும் வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிவன் நான்முகனாகக் காட்சியளிக்கிறார்.

நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?
எல்லை சுற்றுலா: இந்தியா - சீனா எல்லையில் 17 கிராமங்களை சுற்றலாம் - விரிவான தகவல்கள்

கோயில் வளாகத்தில் நூற்றியெட்டு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. பக்தர்கள் அதனைத் தொட்டு வணங்கலாம். இக்கோயில் பாக்மதி எனும் ஆற்றின் கரையில் எழுப்பப்பட்டிருக்கிறது. கோயிலை ஒட்டிய பாக்மதி ஆற்றின் கரை ஆர்யாகாட் என்று சொல்லப்படுகிறது.

எப்படி காசியில் கங்கை நதிக்கரையில் இறந்த உடலைத் தகனம் செய்வார்களோ அதே போல் இந்த ஆர்யா காட்டிலும் இறந்தவர்களை தகனம் செய்கின்றனர். அப்படி செய்யும்போது அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது மத நம்பிக்கையாக இருக்கிறது.

நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?
கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

பசுபதிநாத் கோயிலில் இருந்து வெளியே பாக்மதி ஆற்றைக் கடக்கப் பாலம் உண்டு. ஆற்றின் மறுகரையிலும் நிறைய சிவன் கோயில்கள் இருக்கின்றன. மறுகரை உயரமான பகுதி என்பதால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்கள் அல்லாதவர்கள் அக்கரையிலுள்ள உயரமான இடத்திலிருந்து கோயிலைப் பார்க்கலாம்.

இக்கோயிலில் சாதுக்கள் நிறைந்திருக்கிறார்கள். பெண் சாதுக்களும் அதனுள் அடக்கம். கோயிலுக்கு வருகிறவர்கள் சாதுக்களிடமும் ஆசி பெற்றுச் செல்கின்றனர். ஆன்மிக உணர்வையும், வரலாற்றுணர்வையும் ஒரு சேர தருவதாக இக்கோயில் இருக்கிறது. காத்மாண்டு வருகிறவர்கள் தவற விடக்கூடாதத் தலங்களில் பசுபதிநாதர் ஆலயமும் ஒன்று.   

நேபாளம் : ருத்ராட்ச சந்தை, 108 சிவ லிங்கங்கள் - பசுபதிநாத் கோயில் பற்றித் தெரியுமா?
உலக சுற்றுலா : இந்தியாவிலிருந்து இந்த 10 நாடுகளுக்கு நீங்கள் பைக் ரைட் செய்யலாம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com