Google CEO சுந்தர் பிச்சையை நேரில் சந்தித்த தமிழக இளம் விவசாயி செல்வமுரளி - யார் இவர்?

இவரின் விவசாயம் என்ற குறுஞ்செயலிக்காக 2015 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றார்.
Google CEO Sundar Pichai Meets Tamil Nadu Farmer Selva Murali
Google CEO Sundar Pichai Meets Tamil Nadu Farmer Selva MuraliTwitter
Published on

விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சிக்காக செல்வ முரளியை சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சுந்தர் பிச்சையைக் குறித்துக் கிட்டத்தட்ட அனைத்து தமிழர்களும் அறிவர்.

உலகையே ஆட்டுவிக்கும் அளவுக்கு வலிமை கொண்ட கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பல புதுமையான முயற்சிகளை தனது தலைமையின் கீழ் மேற்கொண்டார். அப்படி அவர் தலைமை தாங்கியவற்றில் கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓ எஸ் உள்ளிட்ட கூகுளின் சில தயாரிப்புகள் நல்ல வெற்றியை கண்டன.

Sundar Pichai
Sundar PichaiTwitter

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த செல்வ முரளி என்ற இளம் தொழில்முனைவோரை நேரில் சந்தித்து சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளார்.

கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வரும் செல்வமுரளி விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரிசக்தி என்ற வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் செயலியை உருவாக்கி நடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆப் உருவாக்குபவர்கள் 100 பேரை கூகுள் தேர்வு செய்து 6 மாத காலம் பயிற்சி அளித்தது.

Google CEO Sundar Pichai Meets Tamil Nadu Farmer Selva Murali
Google: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்? CEO சுந்தர் பிச்சை விளக்கம்

இந்த 100 பேரில் ஒருவராக செல்வமுரளியும் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில், விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தும் செல்வ முரளியின் முயற்சிக்காக சுந்தர் பிச்சை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து செல்வமுரளி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்

”சுந்தர் பிச்சையை சந்தித்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்.

இந்த சந்திப்பில் என்னுடன் தமிழிலேயே பேசினார். அக்ரி சக்தி பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது?

விவசாயத்திற்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது, விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை எங்கே பயன்படுத்தலாம் உள்ளிட்டவற்றை என்னிடம் கேட்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

Google CEO Sundar Pichai Meets Tamil Nadu Farmer Selva Murali
கூகுள், மைக்ரோசாஃப்ட் : உலகை ஆளும் இந்தியர்கள் - யார் இவர்கள்? இவர்களின் செல்வாக்கு என்ன?

யார் இந்த செல்வமுரளி?

செல்வமுரளி 1985 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் எனும் ஊரில் பிறந்தவர்.

இவர் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் ‘விசுவல்மீடியா டெக்னாலஜிஸ்’ என்ற கணினி மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

அக்ரிசக்தி என்ற விவசாய வார இதழையும் நடத்திவருகிறார். இவர் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் இந்தியக் கிளை ஒருங்கிணைப்பாளராகவும், பின் செயல் இயக்குநராகவும், அதன்பின் தலைவராகவும் இருந்தவர்.

Google CEO Sundar Pichai Meets Tamil Nadu Farmer Selva Murali
கூகுள், டெஸ்லா, ஆப்பிள்: செலவை குறைக்க திட்டம் - என்ன நடக்கிறது உலகச் சந்தையில்?

இவரின் விவசாயம் என்ற குறுஞ்செயலிக்காக 2015 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருதினைப் பெற்றார்.

2022 ஆம் ஆண்டு இந்தியா முழுவதுமிருந்து கூகுள் தேர்வு செய்து பயிற்சியளித்த நூறு சிறந்த குறுஞ்செயலி தயாரிப்பாளர்களுள் இவரும் ஒருவராவார்.

அந்தப் பயிற்சியின் முடிவில் சுந்தர் பிச்சையால் நேரில் அழைக்கப்பட்டுப் பாராட்டும் பெற்றுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com