Google: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் கூகுள்? CEO சுந்தர் பிச்சை விளக்கம்

இது குறித்து பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்த செய்தியை உறுதி செய்யவில்லை என்றாலும், மறுக்கவும் இல்லை.
சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சைTwitter
Published on

கூகுள் நிறுவனம் விரைவில் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகிய நிலையில், இந்த செய்திக்கு கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பெருநிறுவனங்களான ட்விட்டர், மெட்டா, அமேசான் லே ஆஃப் நடவடிக்கையை மேற்கொண்டது.

இதில் வெளிநாட்டில் இருந்து வந்து இந்த நிறுவனக்களுக்காக பணியாற்றிய இந்தியர்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

lay off
lay off Twitter

இந்நிலையில், மெட்டா, ட்விட்டர் போன்ற நிறுவனங்களை போலவே கூகுள் நிறுவனமும் ஊழியர்களை லே ஆஃப் செய்யும் எனவும், குறைந்தது 10,000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தது.

இது குறித்து பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்த செய்தியை உறுதி செய்யவில்லை என்றாலும், மறுக்கவும் இல்லை.

லே ஆஃப் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து முன்னரே கூறும் இடத்தில் தான் இல்லை எனவும், வருங்காலத்தை பற்றி கணிப்பது கடினமான செயல் எனவும் பிச்சை கூறியிருந்தார்.

பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, கடந்த சில மாதங்களாகவே கூகுள் நிறுவனம் சில முக்கிய முடிவுகளை ஒழுக்கமாகவும், நியாயமாகவும் எடுக்க முயற்சித்து வருவதாக பிச்சை தெரிவித்திருக்கிறார்.

"அடுத்து என்ன வரப்போகிறது என்பது குறித்து பொருட்படுத்தாமல், எங்களால் முடிந்தவற்றை` கருத்தில் கொண்டு செய்து வருகிறோம்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

“வருங்காலத்தில் பொருளாதார சூழ்நிலையை சிறப்பாக கையாள” கூகுள் சில மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

சுந்தர் பிச்சை
Twitter நிறுவனத்தில் தொடரும் lay off - இந்திய ஊழியர்களை மொத்தமாக நீக்கியது ஏன்?

கூகுள் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகியிருந்தது.

செயல்திறன் மேம்பாடு மற்றும் புதிய தரவரிசையின் அடிப்படையில், இந்த பணி நீக்கம் அமையும் என கூறப்பட்டது.

மேலும் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், அதன் மேலாளர்களிடம் நிறுவனத்திற்கு அதிக லாபம் அளிக்காத 6 சதவிகித ஊழியர்களை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

பணி நீக்கத்திற்கு முந்தைய நடவடிக்கையாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தையின் நிலவரம் மற்றும் காஸ்ட் கட்டிங் ஆகிய காரணங்களுக்காக இந்த லே ஆஃப் மேற்கொள்ளப்படுகிறது என தி இன்ஃபர்மேஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் இதுவரை அந்த நடவடிக்கையில் கூகுள் ஈடுபடவில்லை என்பதும் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

சுந்தர் பிச்சை
Google and Amazon : நடைபெற போகும் பணி நீக்கம் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com