கௌரி லங்கேஷ் : பாஜவுக்கு எதிரான பத்திரிக்கையாளர், சுட்டுக்கொல்லப்பட்ட அவலம் - யார் இவர்?

இந்துதர்மா என்ற பெயரில் மக்களுக்கு செய்யும் இடையூறுகளையும், நீதியற்ற, நியாயமற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறேன் என்றுக் கூறிவந்தார் கௌரி லங்கேஷ். இவர் கொல்லப்பட்ட தினம் இன்று!
கௌரொ லங்கேஷ் : பாஜவுக்கு எதிரான பத்திரிக்கையாளர், சுட்டுக்கொல்லப்பட்ட அவலம் - யார் இவர்?
கௌரொ லங்கேஷ் : பாஜவுக்கு எதிரான பத்திரிக்கையாளர், சுட்டுக்கொல்லப்பட்ட அவலம் - யார் இவர்?Twitter
Published on

கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளரான பி.லங்கேஷின் மகள் கௌரி லங்கேஷ். 1980ம் ஆண்டு ஊடகத்துறையில் பணியைத் தொடங்கினார். 2000ம் ஆண்டு அவரது தந்தை மரணத்துக்கு பிறகு பெங்களூரில் தங்கியிருந்து பாணியாற்றி வந்தார்.

லங்கேஷ் பத்ரிகா என்ற பத்திரிக்கையைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திவந்தார். இந்த பத்திரிகை எந்த விளம்பரமும் இல்லாமல் வாசகர் கட்டணத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அடிப்படையில் கௌரி லங்கேஷ் இடதுசாரியாக இருந்தார். பாஜகவினருக்கு எதிரான கருத்துக்களை தனது பத்திரிகை மற்றும் பிற செயல்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தினார்.

இவர் செப்டம்வர் 5 2017 அன்று, இரவு 8 மணியளவில் இரண்டு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். நெற்றி, மார்பு என 3 இடங்களில் குண்டு துளைத்திருந்தது.

இந்த வழக்கில் பரசுராம் வாக்மோர், பிரவீன் குமார், நவீன்குமார் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

இந்துத்துவ எதிர்ப்பாளராகச் செயல்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கல்புர்கி போன்றோர் படுகொலை செய்யப்பட்டதைப் போன்றே கௌரி லங்கேஷ்சும் கொல்லப்பட்டுள்ளார்.



கௌரி லங்கேஷ் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பரசுராம் வாக்மோர் தான் சுடப்போவது யார் எனத் தெரியாமலே சுட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்துமதத்தைக் காக்க ஒரு பெண்ணை சுட வேண்டும் என்று மட்டுமே அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கு இன்றும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

கௌரொ லங்கேஷ் : பாஜவுக்கு எதிரான பத்திரிக்கையாளர், சுட்டுக்கொல்லப்பட்ட அவலம் - யார் இவர்?
நேரு வம்சாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர் விமர்சனம் சரியா?

கௌரி லங்கேஷ் கர்நாடகாவில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்டம் உருவாக கரணமாக இருந்த பத்திரிகையாளராவார்.

இந்துதர்மா என்ற பெயரில் மக்களுக்கு செய்யும் இடையூறுகளையும், நீதியற்ற, நியாயமற்ற, பாலின பாகுபாடு நிறைந்த கொள்கைகளை கடுமையாக எதிர்க்கிறேன் என்றுக் கூறிவந்தார்.

கௌரொ லங்கேஷ் : பாஜவுக்கு எதிரான பத்திரிக்கையாளர், சுட்டுக்கொல்லப்பட்ட அவலம் - யார் இவர்?
ஜமால் கஷோக்ஜி : செளதி மன்னர்களை நடுங்க வைத்த ஊடகவியலாளர் தூதரகத்தில் கொல்லப்பட்ட கதை



தலித்மக்களுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்தவர். நக்சலைட்டுகள் மனம் திருந்தி எளிய வாழ்க்கையை வாழ பல முயற்சிகளை மேற்கொண்டார்.

கௌரி லங்கேஷின் கொலை, கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலாக பார்க்கப்பட்டது. அவருக்கு பல கொலை மிரட்டல்கள் வந்த போதும் தனது பணிகளில் இருந்து சற்றும் பின்வாங்காமல் தொடர்ந்து நேர்மையாக பணியாற்றி வந்தார்.

இவரது இறப்புக்கு நியாயம் கிடைக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

கௌரொ லங்கேஷ் : பாஜவுக்கு எதிரான பத்திரிக்கையாளர், சுட்டுக்கொல்லப்பட்ட அவலம் - யார் இவர்?
"ஊழல் செய்ய 3 சட்டங்களை திருத்தியது பாஜக" - Ex. IAS சசிகாந்த் செந்தில் அதிரடி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com