நேரு வம்சாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர் விமர்சனம் சரியா?

நரேந்திர மோதி கேட்ட கேள்விக்குத்தான் ரன்தீப் பதில் கொடுத்துவிட்டாரே என கடந்து செல்லாமல், நெட்டிசன்கள் இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். கடந்த சில தினங்களாகவே இந்த தலைப்பு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.
நேரு வம்வாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர்  விமர்சனம் சரியா?
நேரு வம்வாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர் விமர்சனம் சரியா? twitter
Published on

சமீபத்தில், இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, நேரு குடும்பத்தினர் தங்களது பெயர்களுக்குப் பின்னால் 'நேரு' என போட்டுக்கொள்ள வெட்கப்படுகிறார்களா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு "இறைவன்தான் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவருக்கு இந்தியாவின் பண்பாடு தெரியவில்லை அல்லது புரியவில்லை என்பதையே இது காட்டுகிறது. தாய் வழித் தாத்தாவின் பெயரை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதை இந்த நாட்டில் உள்ள யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்" என பதிலடி கொடுத்திருந்தார் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜிவாலா,

நரேந்திர மோதி கேட்ட கேள்விக்குத்தான் ரன்தீப் பதில் கொடுத்துவிட்டாரே என கடந்து செல்லாமல், நெட்டிசன்கள் இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். கடந்த சில தினங்களாகவே இந்த தலைப்பு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது.

ஜவஹர்லால் நேருவின் குடும்பம் ‘நேரு' என்கிற பெயரை தங்கள் பெயருக்குப் பின் பயன்படுத்துகிறார்களா இல்லையா?

இந்தப் பஞ்சாயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, நேருவின் தாத்தாவில் இருந்து தொடங்கினால் சரியாக இருக்கும். கங்காதர் நேருவுக்கு 3 குழந்தைகள். பன்சிதர் நேரு, நந்தலால் நேரு, மோதிலால் நேரு.

இவர்கள் அனைவரும் தந்தையின் பெயரில் இருந்த ‘நேரு’ என்கிற பெயரைப் பயன்படுத்திக் கொண்டனர். மோதிலால் நேருவுக்கு இரு பெண் குழந்தைகள் (விஜயலட்சுமி & கிருஷ்ணா), ஒரு ஆண் குழந்தை (ஜவஹர்லால் நேரு).

பெண்கள் இருவரும் தங்கள் கணவர்களின் குடும்பப் பெயர்களை ஏற்றுக் கொண்டனர். விஜயலட்சுமி நேரு - ரஞ்சித் சீதாராம் பண்டிட் என்பவரை திருமணம் செய்து கொண்டதால் விஜயலட்சுமி பண்டிட் ஆனார். கிருஷ்ணா நேரு - குனோத்தம் ஹுதேசிங் (Gunottam Hutheesingh) என்பவரை மணந்து கொண்டதால் கிருஷ்ணா ஹுதேசிங் ஆனார்.

நேரு வம்வாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர்  விமர்சனம் சரியா?
ராகுல் காந்தியின் 41 ஆயிரம் ரூபாய் டி-சர்ட் : பாஜக விமர்சனம் - பதிலளித்த காங்கிரஸ்!

ஜவஹர்லால் நேரு குடும்பம்

ஜவஹர்லால் நேரு, கமலா என்கிற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இந்திரா பிரியதர்ஷினி நேருவைப் பெற்றேடுத்தார். இந்திரா நேரு - ஃபெரோஸ் காந்தியைத் திருமணம் செய்து கொண்டதால் இந்திரா காந்தியானார். அதன் பிறகு இந்திரா காந்தியின் பரம்பரையில் வந்த ஆண் வாரிசுகள் பலருக்கும், காந்தி என்கிற பெயர் தன்னிச்சையாக வந்துவிட்டது.

இந்திரா - ஃபெரோஸுக்கு முதலில் மகன் பிறந்தான். குழந்தையின் பெயரை முதன் முதலில் எழுதும்போது Rajiva Ratna Birjees Nehru Gandhi என்று இந்திரா காந்தி எழுதியதாக பிபிசி தமிழ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திராவின் தாயின் பெயர் கமலா (தாமரை என்று பொருள்). அதேபொருள் படும் வகையில் ‘ராஜீவ' என்கிற பெயரைச் சூட்டினாராம். தன் தந்தையின் பெயரான ஜவஹர் என்றால் ஆபரணம் என்று பொருளாம். அதைக் குறிக்கும் வகையில் ‘ரத்ன' என்கிற பெயரைப் பயன்படுத்தியுள்ளார். மற்றபடி பிர்ஜிஸ், காந்தி என்பது தன் கணவரின் குடும்பப் பெயர்களாக வைத்துள்ளார் இந்திரா காந்தி.

நேரு வம்வாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர்  விமர்சனம் சரியா?
பிரதமர் நரேந்திர மோடி : ”எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலரும்” - என்ன பேசினார்?

இந்த மூத்த பிள்ளைக்கு வைத்த மிக நீளமானப் பெயர் தான், காலப்போக்கில் ராஜிவ் காந்தி என சுருங்கிவிட்டது, நிலைத்துவிட்டது. ராஜீவ் காந்தியை மணந்த சோனியா - சோனியா காந்தியானார். ராஜீவ் காந்தியின் குழந்தைகளான ராகுல் & பிரியங்கா ஆகியோரும் 'காந்தி' என்கிற பெயரையே தங்கள் தந்தையிடமிருந்து பெற்றனர், பயன்படுத்தினர்.

பிரியங்கா காந்தி ராபர்ட் வத்ராவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின், தனது கணவரின் குடும்பப் பெயரான 'வத்ரா' என்கிற பெயரையும் பயன்படுத்துகிறார். அவரது குழந்தைகள் 'வத்ரா' என்ற குடும்பப் பெயரையே பயன்படுத்துகின்றனர்.

இந்திரா காந்தி - ஃபெரோஸ் காந்திக்குப் பிறந்த இரண்டாவது மகனுக்கு, சஞ்ஜெய் என்கிற பெயர் சூட்டப்பட்டது. அவரும் தந்தை பெயரில் இருந்து 'காந்தி' என்கிற பெயரையே எடுத்துக்கொண்டார். சஞ்ஜெயின் மனைவி மேனகா, அவர்களது குழந்தை வருண் ஆகியோரும் கணவன் மற்றும் தந்தை வழிப்பெயரான 'காந்தி' என்கிற பெயரையே பயன்படுத்தினர். வருண் காந்தியின் மகள் ‘காந்தி' என்கிற குடும்பப் பெயரையே பயன்படுத்துகிறார்.

நேரு பெயரைப் பயன்படுத்தும் நேரு வம்சாவளியினர்:

நேரு குடும்பத்தைச் சேர்ந்த சில ஆண் வாரிசுகள், இப்போதும் 'நேரு' என்கிற குடும்பப் பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். மோதிலால் நேருவின் சகோதரரான நந்தலால் நேருவின் ஆண் வாரிசுகள் 'நேரு' என்ற குடும்பப் பெயரை இன்னும் பயன்படுத்துகிறார்கள்.

நந்தலால் நேருவின் மகன் ப்ரிஜ்லால் நேரு ஒரு முன்னாள் இந்திய அரசு அதிகாரி. அவரது மகன் ப்ரஜ் குமார் நேரு, இந்தியாவின் வெளியுறவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநராகவும் பணியாற்றினார்.

நேரு குடும்பத்தில் வந்த ஆனந்த் குமார் நேருவின் மகன் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான அருண் நேரு, இறக்கும் வரை நேரு என்கிற பெயரைப் பயன்படுத்தினார்.

பெரும்பாலான இந்திய சமூக நடைமுறைகளின் படி, நேரு குடும்பத்தினரைப் பொறுத்தவரை, தந்தை வழிக் குடும்பப் பெயர்களையும், கணவர் வழி குடும்பப் பெயர்களையும் பயன்படுத்தியதால், இந்திரா காந்தி முதல், அவரது சந்ததியினர் 'காந்தி' என்ற குடும்பப் பெயரை அதிகம் பயன்படுத்த தொடங்கினர். எனவே தான் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, நேரு குடும்ப வழித் தோன்றல்கள், இந்திரா குடும்பத்தினர்கள் பலரும் காந்தி என்கிற பெயரை அதிகம் பயன்படுத்தினர், பயன்படுத்தி வருகின்றனர்.

நேரு வம்வாவளியினர் ‘காந்தி' என்ற பெயரை வைத்துக் கொண்டது ஏன்? பிரதமர்  விமர்சனம் சரியா?
மோடி: "ஏன் நேருவின் குடும்ப பெயரை வைத்துக்கொள்ளவில்லை?" - பிரதமரின் கேள்விக்கு பதில் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com