பீகாரில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில், அளவுக்கு அதிகமான சத்தத்தோடு பாட்டு இசைக்கப்பட்டதால், மணமேடையிலேயே மயங்கி விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரேந்திர குமார் என்பவருக்கு கடந்த புதன் கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.
திருமணத்தின்போது பாடல்களை இசைத்து கொண்டாட்டங்கள் நடத்துவது தற்போதெல்லாம் சகஜமாகி விட்டது.
மணமக்கள் கூட மேடையில் உற்சாகமாக நடனமாடுவதை நாம் நிறைய சமூக வலைத்தள வீடியோக்களில் பார்த்திருப்போம்.
சுரேந்திர குமாரின் திருமணத்திலும் பாடல்கள் இசைக்கப்பட்டன. அப்போது, தொடக்கம் முதலே பாட்டின் சத்தம் அதிகமாக இருப்பதாக மணமகன் சுரேந்திர குமார் தெரிவித்து வந்துள்ளார்.
தொடர்ந்து பாட்டுகளை இசைத்துக்கொண்டிருந்த டிஜேவிடம் சத்தத்தை குறைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. எனினும் சத்ததை குறைக்காமலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு பக்கம், அதிக சத்ததால் அவஸ்தைப்பட்டாலும், திருமண சடங்குகளை செய்து வந்திருக்கிறார் சுரேந்திர குமார்.
மணமக்கள் மாலை மாற்றிக்கொண்ட பிறகு அவர் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த இரு குடும்பத்தினரும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றனர்.
ஆனால், மருத்துவர்கள் சுரேந்திர குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கின்றனர்.
அதிகபடியான சத்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மணமேடையில் மயங்கி விழுந்து மாப்பிள்ளை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust