விஜயவாடாவில் குவிந்த போட்டோகிராபர்கள்: சாதனை படைத்த அமைச்சர் ரோஜா - அப்படி என்ன செய்தார்?

'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் ரோஜா இடம் பிடித்தார். இதனை அமைச்சர் ரோஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
Roja
RojaTwitter

சிலர் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்துவார்கள். யாரும் செய்யாத விஷயங்களை அசால்ட்டாக செய்துக் காட்டி கின்னஸில் இடம் பிடிப்பார்கள்.

அந்த வகையில் ஆந்திர அமைச்சர் ரோஜா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக புதிய முயற்சியை செய்துள்ளார்.

அதாவது அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் போட்டோ எடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்படி ஆந்திரா, தெலுங்கானாவைச் சேர்ந்த 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வரவழைப்பட்டனர்.

இதையடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3 ஆயிரம் போட்டோகிராபர்கள் நிற்கவைக்கப்பட்டனர். ”ஒன் கிளிக் ஆன் சேம் டைம்” என்ற தீமில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

Roja
திருப்பதி தரிசனத்திற்குச் சென்ற அமைச்சர் ரோஜாவின் கார் டிரைவர் தடுத்து நிறுத்தம்

இதையடுத்து 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் அமைச்சர் ரோஜா இடம் பிடித்தார். இதனை அமைச்சர் ரோஜா தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Roja
ஆந்திரா : ரோஜாவிடம் திருமணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்ட முதியவர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com