திருப்பதி தரிசனத்திற்குச் சென்ற அமைச்சர் ரோஜாவின் கார் டிரைவர் தடுத்து நிறுத்தம்

பயோமெட்ரிக் மூலம் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் இடத்திற்குச் சென்ற போது அவர்களைத் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
Roja
RojaTwitter
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குத் தரிசனம் செய்ய அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

அந்தவகையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைச்சர் ரோஜா தரிசனம் செய்ய வந்துள்ளார்.

அவருக்குத் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்து, கோவிலில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

tirupati Temple
tirupati TempleTwitter

அப்போது அமைச்சர் ரோஜாவின் கார் டிரைவர் மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோர் மகா துவாரம் வழியாக தரிசனத்துக்குச் சென்றனர்.

அங்கு பயோமெட்ரிக் மூலம் பக்தர்களின் கைரேகை பதிவு செய்யும் இடத்திற்குச் சென்ற போது அவர்களைத் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பாலி ரெட்டி தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Roja
ஆந்திரா : ரோஜாவிடம் திருமணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்ட முதியவர்

தகவல் அறிந்த அமைச்சர் ரோஜா, தேவஸ்தான அதிகாரிகளிடம் சென்று ஏன் என்னுடைய கார் டிரைவர் மற்றும் பாதுகாவலரை தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர்கள் தேவஸ்தான விதிமுறைகளின்படி அவர்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் ரோஜா அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

ஏற்கனவே தேவஸ்தானத்துக்கு நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் கோவில் வளாகத்தில் செருப்பு அணிந்து போட்டோ ஷூட் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அமைச்சர் ரோஜாவின் கார் டிரைவர் மற்றும் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Roja
"கர்ப்பிணியான காதலியை கவனிக்க யாரும் இல்ல" - ஜாமின் கேட்ட கைதி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com