குஜராத் மாநிலம் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்தியாவின் முக்கிய மாநிலமாகத் திகழ்கிறது.
தேசப்பிதாவான காந்தி பிறந்த மாநிலமும் இப்போதைய பிரதமர் மோடி பிறந்த மாநிலமும் குஜராத் தான் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் நாம் அறியாத பல விஷயங்களையும் குஜராத் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
உலகிலேயே மிகப் பெரிய சிலையான வல்லபாய் படேலின் சிலையைக் கொண்டிருக்கும் குஜராத் நாட்டில் வைர மையம் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது.
இந்த பெருமைகளையெல்லாம் தாண்டி அந்த மாநிலத்தில் புதைந்திருக்கும் உண்மைகளைக் காணலாம்.
இந்தியாவிலேயே மிக நீளமான கடற்கரைச் சாலை குஜராத்தில் தான் இருக்கிறது. மேற்கு மாநிலங்களில் எந்த மாநிலத்துக்கும் 160 கி.மீக்கு அதிகமான கடற்கரைச் சாலை கிடையாது.
இந்தியாவின் பழமையான துறைமுகம் குஜராத்தி லோத்தல் பகுதியில் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இது ஹரப்பா காலத்து நகரமாகும்.
இந்தியாவிலேயே அதிக விமான நிலையங்கள் கொண்ட மாநிலமாக குஜராத் திகழ்கிறது. இங்கு 17 விமான நிலையங்கள் இருக்கின்றன.
டாமினோஸ், பீட்சா ஹட் மற்றும் சப்வே ஆகிய துரித உணவு நிறுவனங்கள் உலகிலேயே தங்களது முதல் சைவ உணவகத்தை குஜராத்தின் அகமதாபாத்தில் தான் தொடங்கின.
இந்தியாவிலேயே குஜராத்தில் மட்டும் தான் ஆசிய சிங்கங்கள் காணப்படுகின்றன.
இந்தியாவிலேயே அதிகமாக பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் குடியிருப்பான லக்ஷ்மி விலாஸ் அரண்மனை வதோதரா என்ற பகுதியில் உள்ளது. இது லண்டனில் உள்ள பக்கிங்கம் அரண்மனையை விட 4 மடங்கு பெரியது.
இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம் குஜராத்தில் உள்ள கட்ச் மாவட்டம் தான். இது 45674 சதுர கிலோமீட்டர் பரந்தது.
இந்தியாவின் முதல் கடல்சார் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது குஜராத்தின் கட்ச் வளைகுடா தான்.
அகமதாபாத்தில் உள்ள நியூ லக்கி உணவகம் மிகவும் விசித்திரமானது. இங்கு உணவருந்துபவர்கள் 12 சவப்பெட்டிகளுக்கு மத்தியில் தான் அமர்ந்திருக்க வேண்டும்.
புஜ் அருகே அமைந்துள்ள மாண்ட்வி, 400 ஆண்டுகள் பழமையான கப்பல் கட்டும் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு கடலோர பகுதியாகும்.
கட்ச் மாவட்டத்தில் உள்ள அர்மபாடா என்ற நகரத்தில் பழமையான ஏரி உள்ளது. அங்கு அரிய வகை 'தலைகீழாக ஜெல்லிமீன்கள்' (Cassiopea ) வாழ்கின்றன.
இப்போது உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமும் குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,10,000 பேர் ஒரே நேரத்தில் அமர முடியும்.
பலரும் குஜராத் ஒரு சைவ உணவு சாப்பிடுபவர்களின் மாநிலம் என நினைக்கின்றனர். ஆனால் அப்படி அல்ல என்பதற்கு பதியர் கலி (Bhatiyar Gali) என்ற இடமே சான்று. குஜராத் உணவுகளும் தனிச் சிறப்பு வாய்ந்தது.
லேவில் இருப்பது போன்ற காந்த மலை குஜராத்திலும் உள்ளது. அம்ரேலி மாவட்டத்திற்கு அருகில் உள்ள துளசி ஷியாமில் உள்ள மலைகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust