குஜராத் சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவுகள் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 என இரண்டு நாட்களில் நடைபெற்று முடிந்தது.
முன்னதாக கடந்த மாதம் 12ம் தேதி ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவுகள் நடைபெற்றன.
இரண்டு மாநிலத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்க வைக்குமா பாஜக? அல்லது மாற்றங்கள் ஏற்படுமா? என்ற கேள்வியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் முறையே 182 மற்றும் 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டும் பாஜக வெற்றிபெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இமாச்சல பிரதேசத்தில் பாஜக-வின் கை ஓங்கியிருந்தாலும் பெரும்பாண்மைக்கு சிறிய அளவிலான இழுபறி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை செய்தி சேனல்களிலும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் காணலாம்.
டெல்லி உள்ளாட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
காங்கிரஸுக்கு இணையாக இரண்டு மாநிலங்களின் ஆட்சியையும் கையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது பெரிய காட்சியாக நிலை நிறுத்திக்கொள்ள ஆம் ஆத்மிக்கு இந்த தேர்தல் முக்கிய வாய்ப்பாக பார்க்கப்பட்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust