மணமகனிடம் ரூ.50 லட்சம் கேட்டு 'மான நஷ்ட ஈடு' வழக்கு தொடுத்த நண்பன் - காரணம் என்ன?

மணமகனின் பேச்சால் பெரும் அதிர்ச்சியடைந்த நண்பர் மன உளைச்சலுக்கு ஆளானார். தன்னை அவமதித்ததாக, வழக்கறிஞரை வைத்து மணமகனிடம் ரூ.50 லட்சம் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்குத் தொடுத்துள்ளார்.
Indian wedding (rep)
Indian wedding (rep)Pexels
Published on

பொதுவாகத் திருமண நிகழ்வு என்றால் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்திருக்கும், அதே சமயம் அங்குச் சிறு சிறு பிரச்சனைகளும் நிலவும்.

அந்த சிறு பிரச்சனை சில சமயங்களில் திருமணம் நிற்கும் அளவிற்குக் கூட செல்லும், வடிவேலு படத்தில் வரும் மாப்பிள்ளை சொம்பு கொடுத்தால் தான் கல்யாணம் செய்துப்பாராம், என்ற கதையெல்லாம் நிஜத்தில் நடந்திருக்கும்.

திருமணங்களில் திணுசு திணுசாக ரகளை செய்வதில் இந்தியர்கள் வல்வர்களாக இருப்பார்கள். இங்கு மணமகனின் மீது அவரது நண்பர் ரூ.50 லட்சம் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்குத் தொடுத்துள்ளார்.

marriage
marriage pexels

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பஹதுராபாத்தில்தான் ஒரு விநோதமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் மணமகன், நண்பனை அழைத்து திருமணத்திற்குத் தேவையான அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொள்ளும் படி கூறியுள்ளார்.

அனைத்தையும் செய்து முடித்த மணமகனின் நண்பன், திருமணத்திற்கான ஊர்வலத்தில் கலந்துகொள்ளத் தயாராக இருந்தார்.

Indian wedding (rep)
பொம்மையை திருமணம் செய்து கொண்ட அதிசய பெண் - குழந்தை பிறந்ததுள்ளதாக நெகிழ்ச்சி
Marriage
MarriageTwitter

மணமகனின் வீட்டிற்கு உரிய நேரத்திற்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் மணமகன் தான் முன்பே புறப்பட்டுவிட்டதை நண்பர்களுக்கு தெரியப்படுத்தாதை ஒப்புக்கொள்ளாமல், நீங்கள்தான் தாமதமாக வந்திருக்கிறீர்கள் எனச் சொல்லி நண்பர்களைத் திட்டிவிட்டு அவரவர் வீட்டுக்கு செல்லுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

மணமகனின் பேச்சால் பெரும் அதிர்ச்சியடைந்த நண்பர் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனால் வழக்கறிஞரை அழைத்து மணமகனிடம் ரூ.50 லட்சம் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்குத் தொடுத்துள்ளார்.

Indian wedding (rep)
காதல் கோட்டை: ஒருவரை ஒருவர் சந்திக்காமல் திருமணம் செய்யபோகும் காதல் ஜோடி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com