இந்தியாவில் பல்வேறு மர்மமான இடங்கள் உள்ளன. அமானுஷ்ய மாளிகைகள், அரண்மனைகள், வீடுகள் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் இந்தியாவில் இருக்கும் அமானுஷ்ய ரயில் நிலையங்கள் குறித்தும், அதனை சுற்றியுள்ள திகில் கதைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் பேய் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் ரயில் நிலையம், தான் பஞ்சாபில் உள்ள லூதியானா ஸ்டேஷன். பிளாட்பாரத்தில் இறந்த ஒரு பெண்ணின் ஆவி அந்த நிலையத்தை வேட்டையாடுவதாக நம்பப்படுகிறது. அங்கு வரும் பார்வையாளர்கள், உள்ளூர்வாசிகள் ஏதோ அழுகை சத்தம் கேட்டதாகவும், குறிப்பாக இரவின் அமைதியான நேரங்களில் அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பரோக் நிலையம் வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாகத் தோன்றலாம் ஆனால் இருண்ட ரயில்வே சுரங்கங்களின் பின்னணியில் திகில் கதைகள் இருக்கின்றன. இமாச்சல பிரதேசத்தின் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையம் பேய் கதைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த நிலையத்தின் கட்டிடக் கலைஞரான கர்னல் பரோக் அதன் கட்டுமானத்தின் போது தற்கொலை செய்து கொண்டார் என்று சில தகவல்கள் கூறுகின்றனர். ஸ்டேஷன் அருகே உள்ள சுரங்கப்பாதையில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
பெகன்கோடர் நிலையம் மேற்கு வங்கத்தின் காட்டு பகுதியில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் வேலை செய்த ஊழியர்களுக்கு பேய் அனுபவங்கள் இருந்ததாகவும், அதனால் தப்பி ஓடிவிட்டனர் என்று கதை கூறுகிறது. அதிலிருந்து அந்த நிலையம் சில ஆண்டுகள் ஆள்நடமாட்டம் இல்லாமல் கைவிடப்பட்டது. பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சித்தூர் ரயில் நிலையத்திலும் தண்டவாளத்தில் இறந்த பெண்ணின் பேய் வேட்டையாடுவதாக நம்பப்படுகிறது. இரவு நேரத்தில் அவரது அலறல் சத்தம் கேட்டதாக பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டேஷனைச் சுற்றி பயங்கரமான சூழல் நிலவுவதாக கூறுகின்றனர்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews