பேய்கள், ஆவிகளை கணிசமான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் நம்பாதவர்கள் கூட பேய் சினிமாக்களைப் பார்க்கிறார்கள். பயப்படுகிறார்கள். இதை எப்படி விளங்கிக் கொள்வது? வாழ்க்கை குறித்து வாழ்வா சாவா என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் தமக்கு நீதி கிடைக்கவில்லை என சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படி இறந்து போனோர் தமது நீதிக்காக பேய்களாக நடமாடுகிறார்கள், பழிவாங்குகிறார்கள் என்று சினிமாக் கதைகள் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் நடப்பதாக சிலர் நம்புகிறார்கள். அவ்வாறாக கடவுள் நம்பிக்கை போலப் பேய் நம்பிக்கையும் மக்களைப் பிடித்து ஆட்டுகிறது.
பேய்களுக்கும், நவீன சாலைகள், வாகனங்களுக்கும் என்ன தொடர்பு? பெர்முடா முக்கோணத்தில் கப்பல்களும், விமானங்களும் இன்றும் மாயமாக மறைந்து போவதை சிலர் நம்புகிறார்கள். அது போல இந்தியாவில் சில சாலைகளில் பேய் நடமாட்டம் இருப்பதாக உள்ளூர் மக்களும், அந்த சாலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டோரும் நம்புகிறார்கள். இதற்கு தோதாக இந்தியாவில் சாலை விபத்துகளில் இறப்போரின் விகிதம் அதிகம். அதற்கு மோசமான சாலைகள், சாலை விதிகள் பற்றி விழிப்புணர்வு இன்மை, குடித்து விட்டு வண்டி ஓட்டுவது எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சில மர்மமான சாலைகளில் இத்தகைய விபத்துக்களுக்குப் பேய்களே காரணம் என்று மக்கள் நம்புகின்றனர். அத்தகைய சாலைகள் சிலவற்றை இங்கே காணலாம்.
ஜார்க்கண்ட் மாநில தலைநகராக ராஞ்சியையும் இரும்பு நகரமென்று அழைக்கப்படும் ஜாம்ஷெட்பூரையும் இணைக்கிறது இந்த தேசிய நெடுஞ்சாலை. இங்கே விபத்துக்கள் அசாதாரணமான முறையில் நடப்பதால் சிலர் இதை ஒரு ஆவியின் செயல் என்று கூறுகிறார்கள். சிலரோ இந்த சாலை சபிக்கப்பட்ட சாலை என்று நம்புகிறார்கள். இதற்கு நிவாரணம் தரும் பொருட்டு சாலையின் இருபுறமும் இரண்டு கோவில்கள் உள்ளன. இரண்டு வழிகளிலும் பயணிக்கும் ஓட்டுநர்கள் இக்கோவில்களில் நின்று பிரார்த்தனை செய்து விட்டே பயணிக்கிறார்கள். அப்படி செய்யவில்லை என்றால் அவர்கள் விபத்துக்குள்ளாவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
இந்திய தலைநகர் டில்லியையும், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரையும் இணைக்கும் இச்சாலையில்தான் பங்கார் கோட்டை உள்ளது. இந்த சாலைக்கு இந்த கோட்டைதான் வில்லன். இந்தக் கோட்டையைக் கடக்கும் போது சில எதிர்மறை ஆற்றலையும், சில விசித்திரமான விஷயங்களை உணர முடியுமென மக்கள் நம்புகிறார்கள். ஆகவே இந்த நெடுஞ்சாலையும் சபிக்கப்பட்ட சாலையாகக் கருதப்படுகிறது.
சத்தியமங்கலம் என்றாலே நமது நினைவுக்கு வருவது சந்தனக் கடத்தல் வீரப்பன். தற்போது வீரப்பன் கொல்லப்பட்டு விட்டாலும் வீரப்பன் குறித்த கதைகள் இங்கே மிகவும் பிரபலம். இப்பகுதி முழுவதும் வீரப்பன் சுற்றித்திரிந்த பகுதி என்பதால் வீரப்பன் கதைகளை அறியாதோர் இங்கு யாருமில்லை. சுற்றுலா பயணிகள் வந்தாலும் அவர்களுக்கும் இக்கதைகள் போய்ச் சேருகின்றன. இங்க சாலையில் செல்லும் போது மிதக்கும் விளக்குகளை பார்த்ததாகவும், அந்நியர்களின் அலறல் சத்தம் கேட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதே சாலையில் குறுக்கும் நெடுக்காக ஆங்காங்கே, யானைகள் உள்ளிட்டக் காட்டு விலங்குகள் நடமாடுவது வழக்கம். ஆனால் விலங்குகளுக்கு இல்லாத பேய் பயம் விலங்கு இனத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு இருப்பது ஒரு நகைமுரண்.
இந்த சாலை இரத்தவெறி பிடித்த மந்திரவாதிகள் நடமாடும் சாலையாக நம்பப்படுகிறது. மந்திரவாதிகளால் தமது உடலில் கீறல்கள், காயங்கள் ஏற்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்தச் சாலையில் செல்லும் போது வாகனங்கள் திடீரென நிறுத்தப்படுவதாகவும், வாகனங்களில் உள்ள அசைவ உணவுகள் காற்றில் மறைந்து விடுவதாகவும் ஒரு நம்பிக்கை மக்களை பிடித்தாட்டுகிறது. குறிப்பாக இந்த நெடுஞ்சாலையில் இருக்கும் காஷேடி காட் பகுதிக்குச் செல்லும் போது அசைவ உணவுகளை எடுத்து செல்லக் கூடாது என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள சைவ உணவகங்களில் கூட்டம் அலைமோதும் என்பது உறுதி.
இந்த சாலையில் கொஞ்சம் பழைய வகைப் பேய் நம்பிக்கை நிலவுகிறது. பழைய தமிழ் சினிமாக்களில் வெள்ளை சேலை அணிந்த பெண் பேய்களை பார்த்திருப்போம். நள்ளிரவில் அவர்கள் நடமாடுவார்கள், பாடுவார்கள், கத்துவார்கள், பயமுறுத்துவார்கள். அதே போல இந்த நெடுஞ்சாலையிலும் வெள்ளை சேலை அணிந்த பெண் ஒருவர் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் நம்புகிறார்கள். இதனால் உள்ளூர் மக்கள் இரவு நேரம் வாகனம் ஓட்டுவதற்கு அஞ்சுகிறார்கள். இந்த வெள்ளைச் சேலை பேயைப் பார்த்து வாகனங்கள் நிற்கவில்லை என்றால் அதே வாகன வேகத்தில் அந்த பேயும் ஓடத்துவங்குகிறது என்று உள்ளூர் மக்கள் பயமுறுத்துகிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust