பேய் நகரங்கள் : இந்தியாவில் உள்ள இந்த அமானுஷ்ய ஊர்கள் குறித்து தெரியுமா?

உலகெங்கிலும் இருந்து மக்கள் ஒரு த்ரில்லான பேய் அனுபவத்திற்காக இந்த கிராமத்திற்குப் படை எடுக்கிறார்கள். தற்போது வெறிச்சோடிக் கிடக்கும் இந்த நகரங்கள் ஒரு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் இடங்களாக இருந்தன.
Ghost Town
Ghost TownTwitter
Published on

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேய் நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்குச் செல்வோர் எவரும் தைரியமாக பயணிக்க முடியாது. பயத்தோடுதான் பயணிக்க வேண்டும்.

தற்போது வெறிச்சோடிக் கிடக்கும் இந்த நகரங்கள் ஒரு காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் இடங்களாக இருந்தன. தற்போது அவை ஆள் அரவமற்று இருப்பதற்கு ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது.

ஹம்பி, கர்நாடகா
ஹம்பி, கர்நாடகாTwitter

ஹம்பி, கர்நாடகா

ஹம்பி கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு அருகில் உள்ள ஒரு வெறிச்சோடிய நகரமாகும். இது ஒரு காலத்தில் தங்க நகரமாக இருந்தது. வரலாற்றில் முஸ்லீம் மன்னர்கள் பல முறை இந்நகரத்தின் மேல் படையெடுத்திருக்கிறார்கள்.

நகரத்தின் தங்கத்தையும் செல்வத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். இன்று முழு நகரமும் சிதிலமடைந்து பிரபலமான சுற்றுலா தலமாக மாறியுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது. நகரில் சிதைந்து போன கோவில்கள், தேர்கள் மற்றும் மர்மமான சுரங்கப் பாதைகள் உள்ளன.

Ghost Town
லிச்சென்ஸ்டீன் எனும் பூலோக சொர்க்கம் - ஆஹா இப்படியும் ஒரு நாடா?

குல்தாரா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மர் தங்க நகரின் அருகே இருக்கும் கிராமம்தான் குல்தாரா. ஒரு காலத்தில் சிறிய கிராமமாக இருந்தாலும் மகிழ்ச்சியான கிராமமாக இருந்தது. இக்கிராமம் இன்று வெறிச்சோடிக் கிடப்பதற்கு ஒரு கர்ண பரம்பரைக் கதை ஒன்று சொல்லப்படுகிறது.

அந்த கிராமத்திற்கு வந்த ராஜா ஒருவன், கிராமவாசி ஒருவரின் மகளது அழகில் மயங்கி திருமணம் செய்ய விரும்புகிறான். இது பற்றி கிராம மக்கள் முடிவு செய்வதற்கு ஒரு இரவு அவகாசம் கொடுக்கிறான். அந்த இரவில்தான் 80 குடும்பங்களை உள்ளடக்கிய கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். அந்த ராஜா மீது சாபமும் இட்டனர்.

அதன் பிறகு இங்கு யாரும் வாழ முடியவில்லை. இன்று குல்தாரா ராஜஸ்தானில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். உலகெங்கிலும் இருந்து மக்கள் ஒரு த்ரில்லான பேய் அனுபவத்திற்காக இந்த கிராமத்திற்குப் படை எடுக்கிறார்கள்.

Ghost Town
வெறும் ரூ.10,000 பட்ஜெட்டில் இந்தியாவின் இந்த 7 இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்
லக்பத், குஜராத்
லக்பத், குஜராத்Twitter

லக்பத், குஜராத்

குஜராத்தின் கச் மாவட்டத்தில் உள்ள லக்பத் ஒரு பழங்கால கோட்டை நகரமாகும். ஒரு காலத்தில் பார்ப்பதற்கு அழகாக இருந்த நகரம் இன்று இடிபாடுகளோடு காணப்படுகிறது. லக்பத் நகரம் 18 ஆம் நூற்றாண்டில் ஒரு கோட்டை நகரமாக கட்டப்பட்டது.

இந்நகரம் 7 கி.மீ நீளக் கோட்டையால் சூழப்பட்டுள்ளது. கோட்டைக்கு அருகே இன்றும் சில மக்கள் வாழ்கிறார்கள். மற்றும் ஒரு சிறிய குருத்துவாராவும் உள்ளது. ஜே.பி. தத்தா இயக்கிய ரெஃப்யூஜி எனும் பாலிவுட் திரைப்படம் இங்குதான் படமாக்கப்பட்டது.

மண்டு, மத்தியப் பிரதேசம்
மண்டு, மத்தியப் பிரதேசம்Twitter

மண்டு, மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் மால்வா பகுதியில் அமைந்துள்ள ஒரு பாழடைந்த நகரம்தான் மண்டு. இந்த இடம் மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

பல ஜெயின் கோவில்கள், மசூதிகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்கள் நகரில் உள்ளன. இந்நகரம் ஒரு மலையின் மீது உள்ளது. இந்தூரில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது மண்டு நகரம். இந்தியாவில் அதிகம் பார்வையிடப்படும் பேய் நகரங்களில் இதுவும் ஒன்று.

வரலாற்றில் இருந்து பல கதைகள் இந்நகரோடு இணைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் அதிகம் வருகின்றனர். கதைகளில் பிரபலமானது ராணி ரூப்மதிக்கும் சுல்தான் பாஸ் பகதூருக்கும் இருந்த காதல். எனவே இதைக் காதல் பேய் நகரம் என்று அழைக்கலாமா?

தனுஷ்கோடி, தமிழ்நாடு
தனுஷ்கோடி, தமிழ்நாடுTwitter

தனுஷ்கோடி, தமிழ்நாடு

தமிழகத்தின் இராமேஸ்வரம் அருகே பாம்பன் தீவில் உள்ளது தனுஷ்கோடி. ஒரு காலத்தில் மகிழ்ச்சியான, அழகான கடற்கரை நகரமாக இருந்தது. ஆனால் 1964 ஆம் ஆண்டில் ஒரு சூறாவளிப் புயல் நகரத்தைத் தாக்கியது. அந்தப் புயலால் முழு நகரமும் அழிக்கப்பட்டு கடலில் மூழ்கிப் போனது.

இந்த சூறாவளியால் பாம்பன் தனுஷ்கோடி ரயிலில் சென்ற 115 பேர்கள் கொல்லப்பட்டனர். இயற்கையால் அழிந்து போன தனுஷ்கோடி நகரம் இன்று பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. இயற்கையால் நடந்த சோகத்தைப் பார்க்க மக்கள் இங்கு வருகிறார்கள்.

Ghost Town
உத்தராகண்ட் : குறைந்த விலையில் சுற்றிப்பார்க்க 5 அட்டகாச இடங்கள் | Uttarakhand

ஃபதேபூர் சிக்ரி, உத்திரப்பிரதேசம்

ஆக்ரா நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது ஃபதேபூர் சிக்ரி. இந்த நகரம் முகலாயப் பேரரசர் அக்பரால் 1569ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மேலும் 1571 முதல் 1585 வரை முகலாயப் பேரரசின் தலைநகராகவும் ஃபதேபூர் சிக்ரி விளங்கியது.

இந்த நகரம் பார்ப்பதற்கு அழகாகவும், கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் நிறைந்ததாகவும் இருந்தது. பேரரசர் அக்பருக்கு மிகவும் பிடித்த நகரமாகும் இது. இருப்பினும் இங்கு வாழ்வதற்கு போதுமான தண்ணீர் இல்லை என்பதால் மக்கள் நகரத்தை விட்டு வெளியேறினர்.

மக்கள் வெளியேறிய சிறிது காலத்திலேயே ஃபதேபூர் சிக்ரி ஒரு பேய் நகரமாக மாறியது. பல பேய்க்கதைகளுக்கு இந்நகரம் பிரபலமானது. இன்றும் நகரில் பிரம்மாண்டமான நுழைவாயில்கள் மற்றும் மொகலாய கட்டிடக்கலைக்குச் சான்று பகரும் கட்டிடங்கள் இங்கே உள்ளன.

ராஸ் தீவு
ராஸ் தீவுTwitter

ராஸ் தீவு, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவு

அந்தமானில் உள்ள ஒரு அழகான தீவுதான் ராஸ் தீவு. தொடர்ச்சியாகவும், கடுமையாகவும் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இத்தீவு முற்றிலும் அழிந்து போனது. அதன் பின்னர் இதுவும் ஒரு பேய் நகரமாக மாறியது. ராஸ் தீவு 2018 ஆம் ஆண்டில் சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இங்குள்ள கடலின் அழகைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் வருகை புரிகின்றனர்.

1857 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக இந்திய விவசாயிகளும், போர் வீரர்களும் நடத்திய கிளர்ச்சியின் போது இந்நகரம் முக்கிய பங்கு வகித்தது.

இங்குதான் கிளர்ச்சி செய்த வீரர்கள் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாடு இத்தீவைக் கைப்பற்ற முயன்றது. அதன் பிறகு ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம் காரணமாக தீவு சிதைந்து ஒரு பேய் நகரமாக மாறியது.

Ghost Town
50 வயதை எட்டுவதற்கு முன் ஒவ்வொருவரும் செல்ல வேண்டிய 11 உலக பயணங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com