ஹைதராபாத் அருகே இருக்கும் இந்த ’மினி மாலத்தீவு’ பற்றி தெரியுமா?

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடையே சோமசிலாவின் பிரபலத்தைப் பார்த்து, தெலுங்கானா சுற்றுலாத் துறை பார்வையாளர்களை தங்க வைப்பதற்காக பல ரிவர்ஃபிரண்ட் ரிசார்ட்டுகளை இயக்கி வருகிறது.
Have you heard of this Mini Maldives near Hyderabad?
Have you heard of this Mini Maldives near Hyderabad?Twitter
Published on

உலகின் மிக அழகான கடற்கரைகளைக் கொண்ட மாலத்தீவு, உலகம் முழுவதிலுமிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு இடம் என்றே சொல்லலாம். மாலத்தீவுக்கு ஒரு முறையாவது போக வேண்டும் நினைப்பவர்களும் இங்கு உண்டு.

பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் அவ்வளவு தூரம் பயணிக்க முடியாமல் போகிறது. இந்த கவலையை தீர்க்க தெலுங்கானாவில் ஒரு மினி மாலத்தீவு இருக்கிறது. இந்த மினி மாலத்தீவு பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தெலுங்கானாவின் நாகர் கர்னூலில் உள்ள ஒரு சிறிய கிராமமான சோமசிலா கிருஷ்ணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பெரிதாக பலரும் கேள்விப்பட்டிராத இடமாக இருக்கும் சோமசிலா ஹைதராபாத்தில் இருந்து சுமார் 200 கிமீ தொலைவில் உள்ளது.

பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடமாக சோமசிலா இருக்கிறது.சோமசிலா, ஒரு நாள் பயணம் மேற்கொள்ள சூப்பர் ஸ்பாட் எனலாம்.

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளிடையே சோமசிலாவின் பிரபலத்தைப் பார்த்து, தெலுங்கானா சுற்றுலாத் துறை பார்வையாளர்களை தங்க வைப்பதற்காக பல ரிவர்ஃபிரண்ட் ரிசார்ட்டுகளை இயக்கி வருகிறது.

இந்த ரிவர்ஃபிரண்ட் ரிசார்ட்டுகள் ஆற்றின் அழகிய காட்சிகளை வழங்குவதோடு படகு சவாரி மற்றும் மீன்பிடிக்கும் சிறந்த வாய்ப்புகளையும் வழங்குகிறது.

Have you heard of this Mini Maldives near Hyderabad?
மாலத்தீவு TO சாலமன் - அடுத்த 50 ஆண்டுகளில் கடலில் மூழ்க இருக்கும் தீவுகள் பற்றி தெரியுமா?

சோமசிலாவில் குறைவான மக்கள் நடமாட்டமே இருப்பதால் நீங்கள் நன்றாக வெக்கேஷனை என்ஜாய் செய்ய முடியும்.

அதுமட்டுமில்லாமல் இங்கு மிகவும் பிரபலமான ஸ்ரீ லலிதா சோமேஸ்வர ஸ்வாமி கோயில் உள்ளது. இந்த வளாகத்தில் 15 கோவில்களிலும் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இது 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. மஹாசிவராத்திரி மற்றும் கார்த்திகை பௌர்ணமியின் போது இந்த ஸ்தலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோயில்கள் மற்றும் ஆற்றங்கரையில் உள்ள ஓய்வு விடுதிகள் தவிர, பார்வையாளர்கள் சோமசிலா வியூ பாயின்ட்களின் அற்புதமான காட்சிகளை அனுபவிக்கலாம்.

Have you heard of this Mini Maldives near Hyderabad?
சுவிட்சர்லாந்து முதல் மாலத்தீவு வரை : உலகிலேயே அழகான நிலப்பரப்பு எங்கிருக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com