ரோஷினி நாடார் : இந்தியாவின் பெரும் பெண் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழச்சி

உலக அளவில் தன்னிச்சையாக பில்லியனர் ஆன பெண்மணிகள் பட்டியலில் இவருக்கு 10ஆவது இடம் கிடைத்திருப்பதாக மணி கன்ட்ரோல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Roshni Nadar
Roshni Nadar Twitter
Published on

திரைகடலோடியும் திரவியம் தேடு என்பது தமிழர் பழமொழி. அப்படி கடல் கடந்து பல வியாபாரங்களைத் தமிழர்கள் செய்து வந்தாலும் பில்லியனர்கள் பட்டியலில் எல்லாம் இடம்பிடிப்பதில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான்.

அக்குறைகளை எல்லாம் தீர்க்கும் விதத்தில் தற்போது ஒரு தமிழ் பெண்மணி 'கோட்டக் பிரைவேட் பேங்கிங் ஹுரன் லீடிங் வெல்த் வுமன் பட்டியல் 2021'-ல் முதலிடம் பிடித்திருக்கிறார். இவ்வறிக்கை ஜூலை 27ஆம் தேதி வெளியானது.

இந்தியாவின் மிகப்பெரிய பெண் பணக்காரர்கள் பட்டியலில் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ரோஷினி நாடார் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டில் ரோஷினியின் சொத்து பத்துகள் சுமார் 54% அதிகரித்துள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரோஷினியின் சொத்து மதிப்பு 84,330 கோடி ரூபாய்.Twitter

Roshni Nadar
Roshni Nadar Twitter

இரண்டாவது இடத்தில் இருந்த பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜிம்தார் ஷாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நைகா அழகுசாதனப் பொருட்கள் நிறுவனத்தின் தலைவர் ஃபல்குனி நையார் அவ்விடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்துமதிப்பு கடந்த 2021ஆம் ஆண்டில் சுமார் 963 சதவீதம் அதிகரித்து 57,520 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

எந்தவித பின்புலமும் இல்லாமல் தன்னிச்சையாக ஒரு தொழிலைத் தொடங்கி பில்லியனர் ஆனவர்கள் பட்டியலில் 59 வயதான ஃபல்குனி நையாருக்கே இந்தியாவில் முதலிடம். அதே போல உலக அளவில் தன்னிச்சையாக பில்லியனர் ஆன பெண்மணிகள் பட்டியலில் இவருக்கு 10ஆவது இடம் கிடைத்திருப்பதாக மணி கன்ட்ரோல் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Roshni Nadar
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?
Roshni Nadar
Roshni Nadar Twitter

மூன்றாவது இடத்தில் இருக்கும் கிரண் மஜும்தார் ஷாவின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டில் 21 சதவீதம் அதிகரித்து 29,030 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 40 வயதான டிவிஸ் லெபாரட்டரீஸ் நிறுவனத்தின் நீலிமா மொடபார்தி 28,180 கோடி ரூபாயுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.

சோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்புவின் 69 வயதான சகோதரி ராதா வேம்பு 26,260 கோடி ரூபாயுடன் இப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவர் சோஹோ மெயில் சேவையின் ப்ராடெக்ட் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

யூ எஸ் வி நிறுவனத்தின் லீனா காந்தி திவாரி ஆறாவது இடத்திலும், தெர்மேக்ஸ் நிறுவனத்தின் அனு அகா, மெஹர் புதும்ஜே ஏழாவது இடத்திலும், கன்ஃப்ளுயன்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் நேஹா நர்கெடே எட்டாவது இடத்திலும், டாக்டர் லால் பாத் லேப்ஸ் நிறுவனத்தின் வந்தனா லால் ஒன்பதாவது இடத்திலும், ஹீரோ ஃபின்கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரேணு முஞ்சல் பத்தாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

Roshni Nadar
பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற விரும்பும் பில் கேட்ஸ் - என்ன காரணம்?

இப்பட்டியலில் நேஹா நர்கெடே (Neha Narkhede) உட்பட 25 புதுமுகங்கள் இடம்பிடித்துள்ளனர். 40 வயதுக்குள் 'ஹுரன் குளோபல் யூ40 செல்ஃப் மேட் பில்லியனர்ஸ் பட்டியல் 2022'-ல் இடம் பிடித்த தன்னிச்சையாக வளர்ந்த ஒரே இந்தியப் பெண்மணி நேஹா தான் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

டாப் 100 பெண் பணக்காரர்களின் சொத்துமதிப்பு கடந்த 2020ஆம் ஆண்டில் 2,72,540 கோடி ரூபாயாக இருந்தது, 2021ஆம் ஆண்டில் 4,16,970 கோடியாக அதிகரித்துள்ளது. இது சுமார் 53 சதவீதம் உயர்வு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com