உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேற விரும்புவதாக, அப்பட்டியலில் 3 வது இடத்திலிருக்கும் பில் கேட்ஸ் கூறியிருப்பது ஆச்சரியமளித்திருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸ், தனது சொத்தில் பாதியை தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப் போவதாகவும், அதன் மூலம் உலகில் பசியைப் போக்கவும், நோய்களிலிருந்து மக்களைக் காக்கவும், கல்வி அளிக்கவும் உதவப் போவதாக கூறினார்.
இந்த அறிவிப்பை நேற்று அவரது டிவிட்டரில் கூறியிருந்தார்.
கேட்ஸ், தொண்டு நிறுவனத்துக்கு இந்த மாதம் 20 பில்லியன் டாலர்கள் பணம் அளிக்கப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்போது இவரது மொத்த சொத்து மதிப்பு 103 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பில்கேட்ஸ் மற்றும் அவரது முன்னாள் மனைவி மெலிண்டா நடத்திவரும் தொண்டு நிறுவனத்துக்கு அதிக நிதி அளித்து வரும் வாரன் பஃப்பட்டை தனது ட்வீட்டில் புகழ்ந்திருந்தார் பில்கேட்ஸ்.
கடந்த ஜூன் மாதம் கூட வாரன் 3.1 பில்லியன் டாலர்கள் தொண்டு நிறுவனத்துக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"உலக வரலாற்றில் கொரோனா தொற்று மிகப் பெரிய பின்னடைவுகளில் ஒன்று" எனக் கூறியிருக்கிறார் பில் கேட்ஸ்.
"உலகில் கஷ்ட்டத்திலிருக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்த என் உடைமைகளை சமூகத்துக்கு திருப்பி அளிக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. வசதியாக இருக்கும் அனைவரும் இதைச் செய்ய முன்வர வேண்டும்." என பில் கேட்ஸ் தனது பதிவில் எழுதியுள்ளார்.
வறுமை, பசி, கல்வியின்மை, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் போன்ற மனித குலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க உழைக்கப்போவதாகவும் பில் கேட்ஸ் கூறினார்.
அவரது இந்த திடீர் முடிவானது பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போரின் தாக்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கலாம் என இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust