கோண்ட் மக்கள் : இந்த மலை கிராமத்தில் கடிகாரம் ரிவர்ஸில் சுற்றும் - என்ன காரணம் தெரியுமா?

ஒரு வித்தியாசமான விஷயத்தைத் தான் பார்க்கப் போகிறோம். இந்தியாவில் உள்ள ஒரு மலை வாழ் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீட்டில் கடிகாரம் எதிர்த் திசையில் ஓடும். அந்த மலைவாழ் மக்களுக்குப் பகல் 12 (12 PM) மணிக்குப் பிறகு அவர்களுக்குக் காலை 11 மணி (11 AM). ஆனால் நமக்கு அது பகல் 1 மணியாக (1 PM) இருக்கும்.
Konda Tribes
Konda TribesTwitter
Published on

ஹங்கேரி நாட்டில் மதுபானங்களை அருந்தும் போது சியர்ஸ் சொல்லலாம், ஆனால் ஒருவரின் மதுக் கோப்பை மற்றொருவரின் மதுக் கோப்பைகளோடு மோதி சத்தத்தை ஏற்படுத்தக் கூடாதாம்.

வெனிசுலாவில் ஒருவர் விருந்துக்கு அழைத்தால் 10 - 15 நிமிடம் தாமதமாகத்தான் செல்ல வேண்டுமாம். விருந்துக்குச் சரியான நேரத்துக்குச் சென்றால் பேராசை பிடித்தவர் என்கிற பட்டத்தைக் கொடுப்பார்களாம். ஜெர்மனி, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் ஒரு நிமிட தாமதத்துக்குக் கூட ஏதோ லட்சம் ரூபாய்க் கடன் வாங்கியது போலப் பதறுவார்களாம்.

ரஷ்யாவில் ஒருவருக்கு மஞ்சள் நிற பூவைக் கொடுத்தால் நீங்கள் பிரேக் அப் செய்து கொள்கிறீர்கள் என்று பொருளாம். இப்படி உலகம் முழுக்க, பல கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள், பல வித பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இந்தியா என்கிற ஒரு நாட்டுக்குள்ளேயே, வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் ஒரே விஷயம் பல விதங்களில் கையாளப்படுகிறது. திருமணம் செய்து வைப்பது தொடங்கி, இறுதி அஞ்சலி செலுத்துவது வரை பல பழக்க வழக்கங்களை நாமே கடந்து வந்திருப்போம்.

Clock
ClockPixabay

இப்போது அப்படி ஒரு வித்தியாசமான விஷயத்தைத் தான் பார்க்கப் போகிறோம். இந்தியாவில் உள்ள ஒரு மலை வாழ் இனத்தைச் சேர்ந்த மக்களின் வீட்டில் கடிகாரம் எதிர்த் திசையில் ஓடும்.

பொதுவாக உலகில் கடிகாரங்கள் வலது பக்கமிருந்து இடது பக்கமாகத் தானே ஓடும். அதைத்தான் ஆங்கிலத்தில் கிளாக்வைஸ் என்பர். ஆனால் இந்த மலை வாழ் இன மக்களின் வீட்டில் கடிகாரங்கள் ஆன்டி கிளாக்வைஸ் திசையில் (இடமிருந்து வலமாக) தான் ஓடும். அந்த மக்களைப் பொறுத்தவரைக் காலம் பின்னோக்கி ஓடும்.

உதாரணத்துக்கு அந்த மலைவாழ் மக்களுக்குப் பகல் 12 (12 PM) மணிக்குப் பிறகு அவர்களுக்குக் காலை 11 மணி (11 AM). ஆனால் நமக்கு அது பகல் 1 மணியாக (1 PM) இருக்கும்.

Konda Tribes
கடிகாரத்தில் AM PM : இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இது எப்படி கணக்கிடப்படுகிறது?

இந்த வித்தியாசமான பழக்க வழக்கம் கோண்ட் என்கிற மலைவாழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மலைவாழ் மக்கள் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி சக்தி பீடம் என்கிற சங்கத்தோடு தொடர்பில் இருக்கிறார்கள்.

கோண்ட் மலைவாழ் மக்களைப் பொறுத்தவரை தங்களின் கடிகாரம் தான் இயற்கையோடு மிக நெருக்கமாக, இயற்கை விதிப்படி அமைந்திருப்பதாகக் கருதுகின்றனர்.

அவர்களைப் பொருத்தவரை பூமி இடப் பக்கத்திலிருந்து வலப்பக்கமாகத் தான் சுழல்கிறது. நிலவு கூட, பூமியை இடமிருந்து வலமாகச் சுழல்கிறது என்று நம்புகிறார்கள்.

Konda Tribes
இந்தியாவில் இந்த 7 இடங்களிலிருந்து சூரியன் உதிப்பதைப் ஒருமுறையேனும் பாருங்கள்
Kond
KondTribe

அவ்வளவு ஏன்... இந்து முறைப்படி திருமணம் செய்பவர்கள், கணவன் மனைவி இணைந்து வலமிருந்து இடது பக்கமாக (கிளாக்வைஸ்) நெருப்பைச் சுற்றி வலம் வருவர். ஆனால் கோண்ட் மலைவாழ் மக்களுக்குத் திருமணம் என்றால் இடமிருந்து வலமாக (ஆன்டி கிளாக்வைஸ்) அக்னியைச் சுற்றி வருவர்.

இப்படி வலமிருந்து இடமாகச் சுற்றும் கடிகார முறைக்கு கோண்ட்வானா கிளாக் என்று அழைக்கிறார்கள். இந்த கடிகாரத்தைக் கோண்ட சமூக மக்கள் தவிர இன்னும் 29 சமூகத்தினர் கடைப்பிடிக்கிறார்கள் என இந்தியா டைம்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மக்கள் மஹுவா, பார்சா போன்ற மரங்களை வழிபடுகிறார்கள்.

இனி யாரையாவது பார்த்து காலம் பின்னோக்கிச் செல்லுமா எனக் கேள்வி கேட்பதற்கு முன், கோண்ட்வானா கடிகாரத்தை நினைத்துக் கொள்ளுங்கள் மக்களே.

Konda Tribes
எத்தியோப்பியா : இந்த நாட்டில் இப்போது தான் 2015 ஆம் ஆண்டு ஆகிறது - ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com