கடிகாரத்தில் AM PM : இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இது எப்படி கணக்கிடப்படுகிறது?

AM மற்றும் PM -ன் பொருள் என்ன என்று பலரையும் கேட்டாள் ஏ எம் - ஆப்ட்ர் மிட்நைட், பி எம் - போஸ்ட் மிட்நைட் என விளக்கம் கொடுப்பர். ஆனால் இது சரியான விளக்கம் அல்ல.
Clock
ClockTwitter

பொதுவாக உலகின் பல நாட்டைச் சேர்ந்த மக்கள் பல்வேறு வார்த்தைச் சுருக்கங்களைத் பயன்படுத்தி வருகின்றனர். உதாரணத்திற்கு குளிர்சாதன வசதியை ஆங்கிலத்தில் ஏர் கண்டிஷனிங் என்போம் அதை ஏசி என்று அழைக்கிறோம்.

இந்திய அரசில் உயர்பதவிகளில் இருக்கும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை ஐஏஎஸ் அதிகாரி என்று அழைக்கிறோம். ஒவ்வொரு முறையை அவர்களை இந்தியன் அட்மினிஸ்ட்ரேட்டிவ் சர்வீஸ் அதிகாரி என்று சொல்வதில்லை.

அப்படி கால நேரங்களைக் குறிப்பிட உலகம் முழுக்க ஏ எம் (AM) பி எம் (PM) என வார்த்தை சுருக்கங்களைப் பயன்படுத்தி வருகிறோம்.

இதனுடைய பொருள் என்ன என்று பலரையும் கேட்டாள் ஏ எம் - ஆப்ட்ர் மிட்நைட், பி எம் - போஸ்ட் மிட்நைட் என விளக்கம் கொடுப்பர். ஆனால் இது சரியான விளக்கம் அல்ல.

ஏ எம் என்கிற இரு ஆங்கில எழுத்துக்கு ஆன்ட்டி மெரிடியம் (Anti Meridiem), பி எம் என்கிற எழுத்துக்கு போஸ்ட் மெரிடியம் (Post Meridiem) என்பதே பொருள். இது லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது.

இதனுடைய பொருள் என்ன என்று பலரையும் கேட்டாள் ஏ எம் - ஆப்ட்ர் மிட்நைட், பி எம் - போஸ்ட் மிட்நைட் என விளக்கம் கொடுப்பர். ஆனால் இது சரியான விளக்கம் அல்ல.
Clock
ClockCanva

ஏ எம் மற்றும் பி எம் என்கிற இரு வார்த்தை சுருக்கங்களுக்கு விளக்கம் பார்த்துவிட்டோம். ஆனால் இதை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கு, உலகம் முழுக்க பல விளக்கங்களும் குறிப்புகளும் எதிர்வாதங்களும் இருக்கின்றன.

12 மணிநேர சுழற்சியில் ஒரு நாளைப் பிரித்துக் கணக்கிடும் முறை பண்டைய எகிப்து மற்றும் மெசபடோமியா காலத்திலேயே இருந்தது.

13ஆம் நூற்றாண்டிலேயே கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், பதினைந்தாம் நூற்றாண்டில் வாட்சுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பல்வேறு வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. அப்போதே கடிகாரங்களில் 12 மணிநேரத்தைக் குறிக்கும் எண்கள் மட்டுமே இருந்தன.

இப்போது உலகில் 24 மணி நேர கால முறையும் 12 மணிநேர கால முறையும் பல்வேறு நாடுகளில், பல்வேறு அமைப்புகளில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டன் மற்றும் அதனுடைய காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகள் 12 மணிநேர கால சுழற்சியைப் பின்பற்றுகின்றன, இதில் இந்தியாவும் அடக்கம்.

உலகம் முழுக்க பெரும்பாலான ராணுவங்கள் போன்ற அமைப்புகளில் 24 மணிநேர கால சுழற்சி பின்பற்றுகிறது.

ஏ எம் என்கிற இரு ஆங்கில எழுத்துக்கு ஆன்ட்டி மெரிடியம் (Anti Meridiem), பி எம் என்கிற எழுத்துக்கு போஸ்ட் மெரிடியம் (Post Meridiem) என்பதே பொருள். இது லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்தது.
24 hrs
24 hrs Canva

இப்போது 12 மணிநேர கால சுழற்சியைப் பின்பற்றும் நாடுகளில் 12 மணிநேர சுழற்சி நிறைவடைந்த பின், பகல் 12 மணிக்கு என்ன சொல்லி அழைப்பது இரவு 12 மணிக்கு என்ன சொல்லி அழைப்பது என்கிற சர்ச்சை இன்னமும் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அமெரிக்காவில் பகல் 12 மணிக்கு 12 p.m என்றும் நள்ளிரவு 12 மணிக்கு 12 a.m என்றும் கூறுகின்றனர்.

Clock
அண்டார்டிகா : இனி நான்கு மாதங்கள் சூரியன் உதிக்காது - ஏன் தெரியுமா?

மதியம் 12 மணி பட்டப்பகல் ஆக இருப்பதால் அதை ஏ எம் என்றோ பி எம் என்றோ அழைக்கக்கூடாது என்கிற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

இப்போது வரை பெரிய பெரிய மால்கள் மற்றும் கடைகளுக்குச் சென்று கதவுகளில் புஷ், புல் என எழுதி ஒட்டி இருப்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு கதவைத் இழுக்கவோ தள்ளவோ ஒரு சில நொடிகள் நமக்குத் தேவைப்படுகிறது.

Clock
தூங்கி எழும்போது தொப்புளில் பஞ்சு போன்று உருவாவது ஏன்?


அப்படி இரவு 11:00 பி எம்மில் இருந்து 12:00 ஏ எம்மாக மாறுவதையும், பகல் 11:00 ஏஎம் -லிருந்து 12:00 பிஎம் ஆக மாறுவதையும் இப்போதும் நம்மில் பலரும் பார்த்துப் புரிந்துகொள்ள ஒரு சில நொடிகள் எடுத்துக் கொள்வதை நாம் பார்த்திருப்போம்.

இந்த குழப்பங்களுக்கு எல்லாம் ஒரே தீர்வாக உலகில் பல ராணுவ அமைப்புகள் பயன்படுத்தும் 24 மணிநேர கால சுழற்சியைப் பின்பற்றலாம் என ஒரு தீர்வு முன்வைக்கப்படுகிறது.

இருபத்தி நான்கு மணிநேர கால சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளின் தொடக்கமும் பூஜ்ஜியத்திலிருந்து தான் தொடங்கும். அதாவது நள்ளிரவு 12 மணிக்கு 00:00 ஹார்ஸ் என்றே தொடங்கும்.

Clock
அணில்தானே என்று நினைக்காதீர்கள் - அணில் பற்றிய ஐந்து ஆச்சர்ய உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com