இந்தியா: சட்டப்பூர்வமாக வீட்டில் எவ்வளவு மதுபானங்கள் சேமித்து வைக்கலாம்?
உரிமம் இல்லாமல் மதுபானங்களை விற்க முடியாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! உங்கள் வீட்டில் மதுவை வைத்திருந்தாலும், பல விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு உங்கள் வீட்டில் அளவுக்கு அதிகமான மதுபானங்களை வைத்திருக்க உங்களுக்கு அனுமதி இல்லை. ஒவ்வொரு மாநிலத்தின் கலால் கொள்கையின்படி குறிப்பிட்ட அளவில் மட்டும் தான் மதுபானங்களை நீங்கள் சேமித்து வைக்க முடியும். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
டெல்லி
டெல்லியில் குடியிருப்பாளர்கள் வீட்டில் பீர் மற்றும் ஒயின் உட்பட 18 லிட்டர் வரை மதுபானங்களை சேமிக்க முடியும். ஆனால் ரம், விஸ்கி, ஓட்கா அல்லது ஜின் என்று வரும்போது, வரம்பு 9 லிட்டராக இருக்கும்.
ஹரியானா
ஹரியானா என்று வரும்போது, 6 உள்ளூர் மதுபானம் (ஒவ்வொன்றும் 750 மில்லி), 12 பீர் பாட்டில்கள் (650 மில்லி), 6 ரம் பாட்டில்கள் (750 மில்லி ), 12 ஒயின் பாட்டில்கள் என அனுமதிக்கப்படுகிறது.
பஞ்சாப்
பஞ்சாபில், விதிகள் மிகவும் கடுமையாக உள்ளன. ஒரு கேஸ் பீர், இரண்டு வெளிநாட்டு மது பாட்டில்கள், இரண்டு உள்நாட்டு மது பாட்டில்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது.
உத்தரப்பிரதேசம்
உத்தரபிரதேசம் வெளிநாட்டு மதுபானங்களுக்கு 1.5 லிட்டர், ஒயினுக்கு 2 லிட்டர் மற்றும் பீருக்கு 6 லிட்டர் அனுமதியளிக்கிறது.
ஆந்திரப் பிரதேசம்
ஆந்திரப் பிரதேசத்தில் மூன்று IMFL அல்லது வெளிநாட்டு மதுபானங்களையும், ஆறு பீர் பாட்டில்களையும் சேமித்து வைக்கலாம்.
அருணாச்சல பிரதேசம்
அருணாச்சல பிரதேச கலால் சட்டத்தின் கீழ் 18 லிட்டருக்கு மேல் IMFL அல்லது நாட்டு மதுபானங்களை மாநிலம் அனுமதிக்காது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்காளம் 21 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் 6 750 மில்லி பாட்டில்கள், 18 பீர் பாட்டில்கள் வரை உரிமம் இல்லாமல் வாங்க அனுமதிகிறது.
கேரளா
கேரளாவின் மது நுகர்வு வரம்பு 3 லிட்டர் IMFL மற்றும் 6 லிட்டர் பீர் ஆகும்.
இமாச்சல பிரதேசம்
ஹிமாச்சல பிரதேசம் 48 பீர் பாட்டில்கள் மற்றும் 36 விஸ்கி பாட்டில்களை வைத்திருக்க அனுமதியளிக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

