Virat Kohli: ஜெர்சி நம்பர் 18க்கு என்ன காரணம்? நெகிழ்ச்சியில் நெட்டிசன்ஸ்

இந்திய வீரர் விராட் கோலி ஜெர்சி எண் 18. இவர் 19 வயதிற்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணியில் விளையாடும்போதிருந்து, முதல் இன்று வரை டெஸ்ட், ஒரு நாள், டி20, ஐபிஎல் என அனைத்து வித கிரிக்கெட்டிலும் இவரது ஜெர்சி நம்பர் 18 தான்.
Virat Kohli
Virat Kohlitwitter
Published on

விராட் கோலியின் ஜெர்சி நம்பர் 18 என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் ஏன் இந்த குறிப்பிட்ட எண்ணை தேர்ந்தெடுத்தார் என தெரியுமா? இல்லை என்றால் இந்த பதிவு உங்களுக்காக.

கிரிக்கெட் வீரர்கள் முதன்முறையாக விளையாட களமிறங்கும்போது, அவர்களுக்கு டெப்யூ கேப் வழங்கப்படும். இந்த தொப்பியில் அந்த வீரர் எத்தனையாவது நபராக அணியில் சேருகிறார் என்கிற எண் இருக்கும்.

அதை போலவே ஒவ்வொரு வீரருக்கும் சீருடையில் ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும். டெப்யூ தொப்பியின் எண்ணை அணி நிர்வாகம் தீர்மானிக்கும் என்றாலும், இந்த ஜெர்சி நம்பரை அந்தந்த வீரர்களே தேர்தெடுத்துக்கொள்ளலாம்.

அப்படி சில இந்திய அணி வீரர்களின் ஜெர்சி நம்பர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். எண்கள் 7, 10, 18, 99, 03, 12 ஆகியவற்றை உதாரணமாக கூறலாம்.

இந்திய வீரர் விராட் கோலி ஜெர்சி எண் 18. இவர் 19 வயதிற்கு உட்பட்டோர் கிரிக்கெட் அணியில் விளையாடும்போதிருந்து, முதல் இன்று வரை டெஸ்ட், ஒரு நாள், டி20, ஐபிஎல் என அனைத்து வித கிரிக்கெட்டிலும் இவரது ஜெர்சி நம்பர் 18 தான்.

இதற்கான காரணம் என்ன என்ற கேள்விகள் பல முறை எழுப்பட்டன. அதற்கான காரணம் இணையவாசிகளை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது

Virat Kohli
Virat Kohli: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்தியா முதலிடம் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

விராட் கோலி ரஞ்சி கோப்பைத் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். அவருக்கு 17 வயது இருந்தபோது கோலியின் தந்தை காலமானார். மறுநாள் கோலிக்கு கிரிக்கெட் போட்டி இருந்தது. தந்தை இறந்தபோதிலும், மறுநாள் விளையாடச் சென்றதாகவும், தந்தையின் மரணம் அவரை இன்னும் வலுவான மனிதனாக மாற்றியதாக கூறினார் கோலி.

கோலியின் தந்தை 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி இறந்ததால், அவரது ஜெர்சி நம்பர் 18 ஆக இருக்கவேண்டும் என தீர்மானித்தாராம்.

தந்தை இறந்த மறுநாள் விராட் கோலி விளையாடிய போட்டியில் அவர் 90 ரன்கள் குவித்தார்.

கோலியை போலவே மற்ற சில இந்திய அணி வீரர்களின் ஜெர்சி நம்பர்களுக்கு பின்னால் சிரு கதைகள் உள்ளன.

எம் எஸ் தோனியின் ஜெர்சி நம்பர் 7. இவர் பிறந்த தேதி 7 என்பதால் அந்த எண்ணை இவர் தேர்ந்தெடுத்தார்.

சச்சினின் ஜெர்சி நம்பர் 10. ஆனால் விளையாட தொடங்கிய போது இவரது ஜெர்சி எண் 99. தனது கரியரின் தொடக்கத்தில் சற்றே கடினங்களை சந்தித்துவந்த சச்சின் டெண்டுல்கர் தனது ஜெர்சி எண்ணை 10 ஆக மாற்றிக்கொண்டார்.

இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித்தின் லக்கி நம்பர் 9. ஒற்றை எண்ணாக வைக்க விருப்பமில்லாததால், 45 என தேர்வு செய்தார். இரண்டையும் கூட்டினால் 9 வரும்!

Virat Kohli
Chetan Sharma vs BCCI : விராட் கோலி முதல் ஊக்கமருந்து சர்ச்சை வரை - பதவி விலக காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com