அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவை சேர்ந்த இஸ்லாமிய பெண் முஸ்கான் கானுக்கு ஆதரவாக பேசி உள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.
ஹிஜாபும் இந்திய கலாசாரத்தின் ஓர் அங்கம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ் -யின் துணை அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் இவ்வாறாக தெரிவித்துள்ளது.
இந்த சமூகத்திம் மகள் அவள், தங்கை அவள். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் முஸ்கானுக்கு துணை நிற்போம் என முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் நிர்வாகி அனில் சிங் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “இந்து பாரம்பர்யம் நமக்கு பெண்களை மதிக்க கற்று தருகிறது. இப்படி இருக்கும் போது, ஜெய் ஶ்ரீ ராம் என கோஷமிட்டுக்கொண்டு அந்த பெண்ணை பயமுறுத்தியது தவறு,” என கூறி உள்ளது.
ஹிஜாப் அணிய இந்திய அரசமைப்பு உரிமை வழங்கி உள்ளது. இந்து பெண்களுக்கு தங்களது ஆடையை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கும் போது, அதே உரிமை முஸ்கானுக்கும் உள்ளது.
இஸ்லாமியர்கள் நம் சகோதரர்கள். இரு சமூகத்திற்கும் ஒரே டி.என்.ஏதான் உள்ளது. அதனால் அவர்களை நம் சகோதர, சகோதரிகளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என சிங் தெரிவித்துள்ளார்.