நாட்டில் ஹிஜாப், வேட்டி-க்கு போராடுவது அதிர்ச்சியளிக்கிறது - உயர் நீதிமன்ற நீதிபதிகள்

நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டிக் கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாகப் பிளவுபட்டதா? எனக் கேள்வி எழுப்பினர்.
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

Twitter

Published on

ஶ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், ஆலயப் பிரவேச சட்டப்படி, இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழையத் தடை இருக்கும் நிலையில், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இந்து அல்லாதோர் கோவிலுக்குள் நுழையக் கூடாது என விளம்பரப் பலகை வைக்க வேண்டும். அத்துடன் அந்த பலகைகளில் கோவிலுக்குள் எவ்வாறு ஆடைகள் அணிய வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டும். என வழக்குத் தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனைப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், கோயில்களுக்கு வருபவர்கள் மரபுப்படி உடை அணிந்து வர வேண்டும். தஞ்சை, மதுரை போன்ற கோயில்களில் பிற மதத்தவர்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகின்றனர். கோயில்களுக்குள் வெளிநாட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்று வாதாடினார்.

<div class="paragraphs"><p>இந்து கோவில்</p></div>

இந்து கோவில்

Twitter

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், பல கோயில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுவதாகச் சுட்டிக்காட்டினர். நாட்டில் ஹிஜாப் அணிவதற்காகவும், கோயில்களில் வேட்டிக் கட்டுவதற்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாகப் பிளவுபட்டதா? எனக் கேள்வி எழுப்பினர்.

அத்துடன், எல்லா கோயில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா?, குறிப்பிட்ட உடைதான் அணிய வேண்டும் என்று மரபு உள்ளதா?, அநாகரீகமாக ஆடை அணிவதாகப் புகார் உள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தார்.

<div class="paragraphs"><p>சென்னை உயர்நீதிமன்றம்</p></div>
BJP அலுவலகம் கமாலாலயம் குண்டு வெடிப்பு :"இதற்கெல்லாம் பாஜக பயப்படாது" - கராத்தே தியாகராஜன்

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இதற்கு முன் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு விதித்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் ரத்து செய்ததாகவும், நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வழக்கை ஒரு வாரத்திற்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றதாக உள்ளது எனக் கூறினார். அத்துடன், “மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடாது” என்றும் தெரிவித்தார்.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com