டாடா குழுமம் வரலாறு : டாடா சந்தித்த அவமானங்கள் | பகுதி 7

'இந்தியாவில் இரும்பு ஆலையா, அப்படி நடந்ந்தால் எனக்குத் தேவையான எல்லா இரும்பையும் அங்கிருந்து வாங்கிக் கொள்கிறேன்' என இரும்பு ஆலை கனவை கேலி செய்தார் ஓர் ஆங்கிலேயே அதிகாரி.
Tata Steel Industry

Tata Steel Industry

Facebook

Published on

'இந்தியாவில் இரும்பு ஆலையா, அப்படி நடந்ந்தால் எனக்குத் தேவையான எல்லா இரும்பையும் அங்கிருந்து வாங்கிக் கொள்கிறேன்' என இரும்பு ஆலை கனவை கேலி செய்தார் ஓர் ஆங்கிலேயே அதிகாரி. காலம் டாடா குழுமத்துக்கு மயூர்பஞ்சில் விடை கொடுத்தது.

Mayurbhanj

Mayurbhanj

Twitter

சரி துர்கில் ஏன் ஆலையைத் தொடங்கவில்லை?

துர்க் பகுதியில் போதுமான இரும்பு இருந்தும், டாடாவால் ஆலையை நிறுவ முடியாமல் போனதற்கு காரணம் தண்ணீர். இரும்பு தொழிற்சாலைக்கு நீர் அத்தனை அவசியம். அன்றைய சூழலில் இருந்த தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு ஆலைக்குத் தேவையான நீரைக் கொண்டு வருவது சிரமமான காரியம் என்பதால், வருத்தத்தோடு டாடா அடுத்தடுத்த இடங்களில் இரும்பைத் தேடத் தொடங்கினார், ஆனால் பலன் கிடைக்கவில்லை.

அப்போது இந்திய ரயில்வே போர்டின் தலைவராக இருந்த சர் ஃப்ரெடரிக் அப்காட் 'இந்தியாவில் இரும்பு ஆலையா, அப்படி நடந்தால் எனக்குத் தேவையான எல்லா இரும்பையும் அங்கிருந்து வாங்கிக் கொள்கிறேன்' என எல்லி நகையாடினார். மற்ற பல ஆங்கிலேயே அதிகாரிகளும் இதே உணர்வை பிரதிபலித்தனர்.

ஆனால் காலம் வேறு கணக்கு போட்டிருந்தது. டாடா உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை என்றாலும், அதிர்ஷ்டம் இன்று ஒடிஷா மாநிலத்தில் ஓர் அங்கமாக இருக்கும் மயூர்பஞ் சமஸ்தானத்திலிருந்து வந்தது. முன்பு துர்க் பகுதியில் பணியாற்றி இருந்த பி என் போஸ் என்கிற புவியியலாளர், மயூர்பஞ்சில் நிறைய இரும்புத் தாது வளம் இருப்பதாக கடிதம் எழுதினார். மேலும், தன் சமஸ்தானத்துக்குள் ஆலை தொடங்க வருவோருக்கு தேவையான விஷயங்களைச் செய்து கொடுக்கவும் மகாராஜா தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார் போஸ். அப்போது மயூர்பஞ்ச் தனி சமஸ்தானம் என்பதால் அன்றைய மகாராஜாவின் ஆதரவு மிகவும் அவசியம்.

Tata Steel Industry

டாடா குழுமம் வரலாறு : ஒரு குடும்பம் ஒரு நாட்டை கட்டமைத்தது எப்படி? - விறுவிறுப்பான கதை | 3

இரும்பு தாது

இரும்பு தாது

Facebook

மீண்டும் இரும்புக்கு வருவோம்

கடிதம் கிடைத்த பின் மீண்டும் பணிகள் தொடங்கின. கரடு முரடான பாதைகள், அனாயாசமாக அருகில் நடமாடும் காட்டு யானைகள், சந்தேல் பழங்குடி பெருமக்கள் என பயணம் திகில் கிளப்பியது. ஆனால் மயூர்பஞ்ச் நிலத்தை சில அடி ஆழம் தோண்டிய உடனேயே, ஒரு பலமான பெரிய இரும்புத் துண்டு தட்டுப்பட்டது.

மற்ற பரிசோதனைகள் எல்லாம் முடிந்த போது அப்பகுதி மண்ணில் 60 சதவீதத்துக்கு மேலாக இரும்பு இருப்பதும், ஒட்டுமொத்தத்தில் 3.5 கோடி டன்னுக்கும் அதிகமாக இரும்பு தாது இருப்பது உறுதி செய்யப்பட்டது.

காலிமாட்டி ரயில் நிலையம்

காலிமாட்டி ரயில் நிலையம்

Twitter

இரும்பு ஓகே மற்ற பொருட்கள்..?

தண்ணீர்.

ஆம் அதே தான்...

இதோ நீருக்கான தேடல் சட்டென முடிந்தது. அருகிலேயே இரு நதிகள் இருந்தன.

அடுத்து என்ன போக்குவரத்து வசதிதான்... எதிர்பார்ப்பது போல சரக்கை ஏற்ற இறக்க தோதான இடம் ஏதாவது இருக்கிறதா என டாடா குழுமத்தின் தேடல் காலிமாட்டி ரயில் நிலையத்தில் முடிந்தது. மொத்த டாடா குழுமமும் மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்திய ரயில்வேயில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் ஒரு சில ஆங்கில எழுத்துக்களில் ஒரு குறியீடு உண்டு. உதாரணமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு MS என்பார்கள். அப்படி காலிமாட்டி ரயில் நிலையத்து இன்று வழங்கப்பட்டு வரும் குறியீடு என்ன தெரியுமா...? TATA . காரணம், காலிமாட்டி ரயில் நிலையத்துக்கு, பின்னாளில் டாடா நகர் என்று பெயர் மாற்றப்பட்டது.

இதெல்லாம் நடந்தேறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, தன் கனவு கருவாய், உருவாய், உயிராய் விரியுமென மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த ஜாம்செட்ஜி டாடா, இரும்பு ஆலையைச் சுற்றி எப்படி இருக்க வேண்டும் என தொராப்ஜிக்கு கடிதம் எழுதினார்.

அதில், இரும்பு ஆலை அமைய உள்ள நகரத்தில் சாலைகள் அகலமாகவும், தரமாகவும் இருக்க வேண்டும். நிறைய டிரக்குகள் சரக்கை ஏற்ற இறக்க வரும் என்பதால் கவனமாக சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இரும்பு ஆலை அதிக வெப்பத்தை வெளிப்படுத்தும் என்பதால், சாலையின் இரு பக்கங்களில் நிறைய வேகமாக வளரக் கூடிய மரங்களை நட வேண்டும். அது கிராமத்தை ஓரளவுக்காவது வெப்பத்திலிருந்து காக்கும்... என பல விஷயங்களை முன் கூட்டியே கணித்து வழிகாட்டியிருந்தார் ஜாம்செட்ஜி டாடா.

Bombay House

Bombay House

Twitter

இரும்பு ஆலைக்குப் போதுமான பணம் தயாரா ?

இப்போது ஆலைக்கான இடம், நீர் எல்லாம் ஓகே. இந்தியாவின் முதல் இரும்பு ஆலைக்குப் போதுமான பணம் தயாரா..? என்றால் இல்லை. 1907 காலகட்டத்திலேயே இரும்பு ஆலைக்கு கோடிகணக்கில் பணம் தேவைப்பட்டது.

தொராப்ஜி லண்டனில் பல முதலீட்டாளர்கள், வங்கியாளர்களைச் சந்தித்தார். உற்சாக வார்த்தைகள் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை. லண்டனில் இருந்த முதலீட்டாளர்கள் அப்போது நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய தயங்கிக் கொண்டிருந்த காலமது.

இந்தியாவிலும் 1906 - 07 காலகட்டத்தில் தேசியவாதம் தலை தூக்கத் தொடங்கி இருந்தது. இந்திய வளங்களில் ஆங்கிலேயர்கள் செல்வம் கொழிப்ப, இந்திய பணக்காரர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியையும், டாடாவின் இரும்பு ஆலை திட்டத்துக்கு உதவ வேண்டிய தேவையையும் உணர்த்தியது.

அந்த சமயம் பார்த்து டாடா இரும்பு ஆலைக்கு பங்குகளை வெளியிட்டு இந்தியர்களிடையே பணத்தைத் திரட்ட விரும்பினார் தொராப்ஜி. இந்தியாவின் முதல் இரும்பு ஆலைத் திட்டத்தில் பங்கெடுக்க விருப்பமில்லையா? என அவர் கேள்வி எழுப்பியது மிக பலமாக எதிரொலித்தது.

1907 ஆகஸ்ட் 26ஆம் தேதி 23 கோடி ரூபாய் மதிப்பிலான பொது பங்கு வெளியீடு தொடங்கப்பட்டது. தொராப்ஜி 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். வெகுஜன மக்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒதுக்கப்பட தயாராக இருந்தன.

அடுத்த நாள்.. அந்த அதிசயம் நிகழ்ந்தது. பம்பாயில் உள்ள டாடாவின் நவ்சாரி மேன்ஷனுக்கு முன் நீண்ட வரிசை காத்திருந்தது. நவ்சாரி மேன்ஷன் உட்பட பம்பாய் ஹவுஸ் தான் இன்று வரை டாடா குழுமத்தின் தலைமையகமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பணக்காரர்கள், வெகுஜன மக்கள் என தங்கள் சக்திக்கு தகுந்தவாறு பணத்தை கொடுத்து, டாடா இரும்பு ஆலையின் பங்குகளை வாங்கிச் சென்றனர். இரு வாரத்துக்குள் கிட்டத்தட்ட 8,000 பேர் முதலீடு செய்திருந்தனர். விஷயத்தைக் கேள்விப்பட்ட குவாலியர் சமஸ்தான மகாராஜா 4,00,000 பவுண்ட் முதலீடு செய்தார். தனது தந்தையின் கனவு நனவானதை எண்ணி பெரிதும் மகிழ்ந்தார் தொரப்ஜி.

ஜாம்செட்ஜி டாடாவின் கனவு இந்தியாவுக்கு முதல் இரும்பு ஆலையை மட்டும் கொடுக்கவில்லை, முதல் முறையாக இந்தியாவில், இந்தியர்களால், இந்தியர்களுக்காக, இந்தியர்களே ஒரு திட்டத்தை முன்னெடுக்கும் ஒரு தேசத்தின் சுதந்திர தாகம் வெளிப்படும் தருணத்தை உருவாக்கினார்.

இத்தனை ஆண்டு காலம் டாடா பல வியாபாரங்களைச் செய்து வந்தாலும், அக்குழுமம், டாடா என்கிற பெயரை முதலில் பயன்படுத்தியது இரும்பு ஆலைக்குத்தான். Tata Iron and Steel Company சுருக்கமாக TISCO என்றழைக்கப்பட்டது. இன்றும் இந்திய பங்குச் சந்தையில் Tata Steel என்கிற பெயரில் அந்நிறுவனம் வர்த்தகமாகி வருகிறது.

முந்தையப் பகுதியை படிக்க

Tata Steel Industry

TATA குழுமம் வரலாறு : இந்தியாவை எஃகு கோட்டையாக மாற்ற போராடிய இரும்பு மனிதன் |பகுதி 6

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com