இந்துக்களுக்கு மட்டும்தான் ஹோலி பண்டிகையா? முகலாயர் காலத்தில் என்ன நடந்தது தெரியுமா?

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரின் ஹோலிப் பாடல்கள் (phags) இன்றும் போற்றப்படுகின்றன, ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின் போது அவரது இந்து அமைச்சர்கள் தனது நெற்றியில் குலாலைப் பூச அனுமதித்தார்.
இந்துக்களுக்கு மட்டும்தான் ஹோலி பண்டிகையா? முகலாயர் காலத்தில் என்ன நடந்தது தெரியுமா?
இந்துக்களுக்கு மட்டும்தான் ஹோலி பண்டிகையா? முகலாயர் காலத்தில் என்ன நடந்தது தெரியுமா?Twitter

ஹோலி பண்டிகை வண்ணம் பூசி விளையாடும் வட இந்திய இந்துக்களின் விழா என்றே பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் முகலாயர் காலத்தில் இஸ்லாமியர்கள் ஈத்-எ-குலாபி (பிங்க் ஹோலி) அல்லது ஆப்-இ-பாஷி (வண்ணமயமான பூக்களின் மழை) என்ற பெயரில் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியிருக்கின்றனர் என்கிறார் பத்ம ஶ்ரீ விருதுவென்றவரான கே.கே.முகமது, இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் மண்டல இயக்குனர்.

ஆண்டு முழுவதும் மக்கள் ஹோலி பண்டிகைகாக காத்திருக்கின்றனர். தண்ணீரை பீச்சியடிக்கும் துப்பாக்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்திக் கொண்டாடியிருப்பாதாக குறிப்புகள் உள்ளனவாம்.

முகலாய மன்னர் ஜஹாங்கீர் ஹோலி கொண்டாட்டங்களை ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் ஆர்வமாக கலந்துகொண்டதாகவும் மனைவியுடன் மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. முகலாய மன்னர்கள் ஹோலி கொண்டாடும் ஓவியங்கள் இருக்கின்றன.

கடைசி முகலாயப் பேரரசர் பகதூர் ஷா ஜாஃபரின் ஹோலிப் பாடல்கள் (phags) இன்றும் போற்றப்படுகின்றன, ஒவ்வொரு ஆண்டும் ஹோலி பண்டிகையின் போது அவரது இந்து அமைச்சர்கள் தனது நெற்றியில் குலாலைப் பூச அனுமதித்தார்.

டெல்லி செங்கோட்டையில் முகலாயர்கள் விமரிசையாக ஹோலி கொண்டாடியுள்ளனர். பலவகையான மேள தாளங்களுடன் பெண்கள் நடனமாட கலைகட்டியிருக்கிறது ஹோலி பண்டிகை!

நாடு முழுவதும் சுற்றித்திரியும் கலைஞர்கள் செங்கோட்டையில் ஒன்று சேர்ந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்திருக்கின்றனர்.

இந்துக்களுக்கு மட்டும்தான் ஹோலி பண்டிகையா? முகலாயர் காலத்தில் என்ன நடந்தது தெரியுமா?
பித்தோராகர் : வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகையை வேண்டாமென சொல்லும் 100 கிராமங்கள் - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com