பித்தோராகர் : வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகையை வேண்டாமென சொல்லும் 100 கிராமங்கள் - ஏன்?
பித்தோராகர் : வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகையை வேண்டாமென சொல்லும் 100 கிராமங்கள் - ஏன்?Twitter

பித்தோராகர் : வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகையை வேண்டாமென சொல்லும் 100 கிராமங்கள் - ஏன்?

ஹோலி மலைவாழ் பழங்குடியினரின் பண்டிகை அல்ல. மலையக சமூகத்தினர் தங்களின் தனித்துவமான நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் மரபுகளை பின்பற்றுகின்றனர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
Published on

இந்தியாவின் பிரபலமான பண்டிகைகளில் ஒன்று தான் ஹோலி. நாட்டின் பெரும்பாலான இடங்களில் இந்த ஹோலி பண்டிகை கொண்டாடினாலும், உத்தரகாண்டின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஹோலி வேண்டாமென சொல்கின்றன

இப்பகுதி சிப்லா கேதார் எனும் பிரபலமான யாத்திரை அல்லது மலையேற்றத்திற்கு பிரபலமானது.

ஹோலியின் வண்ணங்கள் தங்கள் புனித பூமியை கறைபடுத்தும் என்று உள்ளூர்வாசிகள் நம்புகிறார்கள்.

இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் ஹோலி கொண்டாடுவது உள்ளூர் தெய்வங்களை வருத்தப்படுத்தலாம் என்றும் சோகமான நிகழ்வுகள் ஏதேனும் நடக்கக்கூடும் என்றும் நம்புகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள மக்கள் ஹோலியை பாரம்பரிய முறைப்படி கொண்டாடமல், பைத்கி ஹோலி என்று கொண்டாடுகிறார்கள். இதில் வண்ணங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.

கிராம மக்கள் தங்கள் பைத்கி ஹோலியை பாரம்பரிய உணவுகள், நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்களுடன் கொண்டாடுகிறார்கள்.

பித்தோராகர் : வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகையை வேண்டாமென சொல்லும் 100 கிராமங்கள் - ஏன்?
பிஸ்வநாத் காட் : இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் இதுதான் - ஏன் தெரியுமா?

சில வரலாற்றாசிரியர் என்ன சொல்கிறார்கள் என்றால் ஹோலி மலைவாழ் பழங்குடியினரின் பண்டிகை அல்ல. மலையக சமூகத்தினர் தங்களின் தனித்துவமான நம்பிக்கைகள், கலாச்சாரம் மற்றும் மரபுகளை பின்பற்றுகின்றனர் என்கிறார்கள்.

உத்தரகாண்டில் உள்ள குமாவோன் பகுதி அல்மோரா, பாகேஷ்வர், சம்பவத், நைனிடால், பித்தோராகர் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய ஆறு மாவட்டங்களால் ஆனது.

இப்பகுதியில் மிகவும் கவர்ச்சிகரமான மலையேற்ற பாதைகள் மற்றும் முக்கியமான கோவில்கள் உள்ளன. உத்தரகாண்ட் சென்றால் இந்த இடங்களுக்கு சென்று வரலாம்.

பித்தோராகர் : வண்ணமயமான ‘ஹோலி’ பண்டிகையை வேண்டாமென சொல்லும் 100 கிராமங்கள் - ஏன்?
உலகிலேயே தூய்மையான காற்று இருக்கும் கிராமம் - Edge Of The World என அழைக்கப்படுவது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com