ஹாரன் அடிக்கவேண்டாம் என்பதை சொல்ல KBC பாணியில் ஆட்டோவின் பின்னால் போடப்பட்டிருந்த மெச்சேஜ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சாலையில் வண்டியோட்டிச் செல்லும்போது நாம் சந்திக்கும் பெரும் பிரச்னை, டிராஃபிக் மற்றும் ஹாரன் சத்தம். பல விதமான ஹாரன்கள், ஏகமாக ஒலிக்கும்போது, பல நேரங்களில் எரிச்சல் வரும். அதை சமாளிக்க என்னதான் செய்வது என்று நாம் நிறைய யோசித்திருப்போம். மிஞ்சி மிஞ்சிப் போனால், ஹாரன் அடிக்காதீர்கள் என்ற வாசகம் தான் நம் வண்டிகளின் பின்னால் எழுதுவோம்.
ஆனால், டெல்லியைச் சேர்ந்த இந்த ஆட்டோ டிரைவரின் யுக்தி, பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான டுங்கு வரதராஜன் பகிர்ந்த ஒரு புகைப்படத்தில், "Honking Hurts" என்று எழுதப்பட்டு, அதற்கு கீழ் KBC பாணியில் ஒரு கேள்வியும், அதற்கான நான்கு பதில் ஆப்ஷன்களும் இருந்தது.
"டிராஃபிக்கில் ஹாரன் அடிப்பதால் என்ன நடக்கும்?
A: சிக்னலில் லைட் சீக்கிரமாக பச்சை நிறத்திற்கு மாறும்
B: சாலை விரிவடையும்
C: வாகனம் பறக்கும்
D: எதுவும் இல்லை" என்று ஒட்டப்பட்டிருந்தது.
இதை டிவிட்டரில் பகிர்ந்ததிலிருந்து 20 ஆயிரத்துக்கு மேல் லைக்குகளையும், ஆயிரக்கணக்கில் ரீ-ட்வீட்டுகளுமகுவிந்துள்ளன. "எவ்வளவு புத்திசாலித்தனமான கேள்வி இது?" என்று ஒருவர் பதிவிட்டிருந்தார். இன்னொருவர், "இந்த உண்மையை நாம் எல்லோரும் அறிந்தால் நன்றாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust