பேரரசின் முடிசூட்டு விழா குடியரசு தின அணிவகுப்புகளுக்கு முன்னுதாரணமாக அமைந்தது எப்படி?

காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, இந்த புகழ்பெற்ற டெல்லி தர்பார் விவகாரத்தின் சில கூறுகள் சுதந்திர இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக முன்னெடுக்கப்பட்டன.
How Did The 1903 Coronation Of Edward VII Set The Precedent For Republic Day Parades
How Did The 1903 Coronation Of Edward VII Set The Precedent For Republic Day ParadesTwitter
Published on

குடியரசு தின விழா டெல்லி தர்பார் எனப்படும் மூன்று பேரரசின் முடிசூட்டு விழாக்களில் இருந்து உத்வேகம் பெற்றது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

டெல்லி தர்பார் என்பது டெல்லியில் இந்தியப் பேரரசரின் வழிமுறை வருதலையொட்டி கூடிய மக்கட்கூட்டமாகும். இம்பீரியல் தர்பார் எனவும் அறியப்பட்ட இந்தக் கூட்டம் பிரித்தானியப் பேரரசின் உச்சகட்டத்தில் மூன்று முறை, 1877, 1903, 1911 ஆகிய ஆண்டுகளில் கூடியது.

இந்த மூன்றில் 1911 தர்பாருக்கு மட்டுமே அரசராக முடிசூட்டிய ஐந்தாம் ஜோர்ஜ் வந்தார். இச்சொல் மொகலாயப் பொதுவழக்கிலிருந்து உருவானது.

முதல் தர்பார்

1877 ஜனவரி 1 அன்று, பிரிட்டிஷாரின் முதல் இந்திய தர்பார் டெல்லியில் கூடியது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் கையில் இருந்த அதிகாரம், பேரரசி விக்டோரியாவுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது.

இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா அறிவிக்கப்பட்ட அந்த தர்பாரில், பல மகாராஜாக்களும் சில ராஜாக்களும் கலந்து கொண்டார்கள்.

இரண்டாவது தர்பார்

1903-ல் இரண்டாவது டெல்லி தர்பாரை ஏற்பாடு செய்திருந்தார். அப்போது கிங் ஆக ஏழாம் எட்வர்டும், குயினாக அலெக்ஸாண்ட்ராவும் பதவி ஏற்றிருந்தார்கள்.

அவர்களை டெல்லிக்கு வரவழைத்து இங்கொரு பதவியேற்பு விழா நடத்த வேண்டுமென்பது கர்ஸனின் திட்டம். சுமார் £3,00,000 செலவில் இரண்டாவது டெல்லி தர்பார் கர்ஸனால் கோலாகலமாக நடத்தி முடிக்கப்பட்டது

How Did The 1903 Coronation Of Edward VII Set The Precedent For Republic Day Parades
உலகின் 3வது பணக்கார நாடாகும் இந்தியா - என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

மூன்றாம் தர்பார்

1911-ல் மூன்றாம் முறையாக டெல்லி தர்பாரைக் கூட்டுவதற்கான சூழ்நிலை வந்தது. புதிய கிங்காக ஐந்தாம் ஜார்ஜும் குயினாக மேரியும் பதவி ஏற்றிருந்தார்கள். அவர்களை இந்தியாவின் பேரரசராக, பேரரசியாக அறிவித்து, கோலாகலக் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

டெல்லி தர்பார் நிகழ்ச்சிகள் அணி வகுப்புகள் பெரிய அளவில் முன்னுதாரணமாக அமைந்தது. இதுவரை பார்த்திராத விழா கொண்டாடமாக இது இருக்கிறது. காலனித்துவ ஆட்சிக்குப் பிறகு, இந்த புகழ்பெற்ற விவகாரத்தின் சில கூறுகள் சுதந்திர இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களுக்காக முன்னெடுக்கப்பட்டன.

How Did The 1903 Coronation Of Edward VII Set The Precedent For Republic Day Parades
அடிமை முறையிலிருந்து தப்பி அமெரிக்கா சென்ற ஆசிய மக்களின் கதை - விறுவிறு வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com