இந்தியாவில் தங்க நகைகளின் விலை எப்படி கணக்கிடப்படுகிறது?

தங்கத்தின் விலை அதன் காரட்டில் மற்றும் எடையில் ஒரே மாதிரியாக இருந்தாலும், சந்தையில் ஒவ்வொரு தங்கப் பொருளுக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தங்க நகைகளின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்தியாவில் தங்க நகைகளின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?Twitter
Published on

தங்க நகைகள் வாங்குவது நம் நாட்டில் ஒரு பாரம்பரியம் என்றே சொல்லலாம். இந்தியா முழுவதும் குறிப்பாக திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு தங்கம் என்பது ஒரு கலாச்சார மதிப்பாக கருதப்படுகிறது.

தங்கம் வாங்குபவர்கள், அதன் கட்டணம் குறித்து அறிந்துகொள்வது அவசியம்.

எப்போது தங்கம் வாங்கினாலும் நகைக்கடைக்காரர்கள் தங்க நகைகளுக்கு எப்படிக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

இந்தியாவில் தங்கத்தின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஒவ்வொரு நாளும் நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த தங்கத்தின் விலைக்கேற்ப தங்க வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் நகைகளை விற்கின்றனர்.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, ஒவ்வொரு நகரத்திலும் தங்கத்தின் விலையை அறிவிக்கும் உள்ளூர் தங்க சங்கம் உள்ளது.

அதனால்தான் ஒவ்வொரு நகரத்திலும் ஒரே எடையுள்ள தங்கத்தின் விலை வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நகைகளின் இறுதி விலையை கணக்கிட நகைக்கடைக்காரர்கள் எந்த ஃபார்முலாவைப் பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.

நகைகளின் இறுதி விலை

ஒரு கிராம் தங்கத்தின் விலை (22 காரட் அல்லது 18 காரட்) மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தங்கப் பொருளின் எடை + செய்யும் கட்டணம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள உதாரணம் உங்களுக்கு புரிந்துகொள்ள உதவும்

உதாரணமாக, தங்கத்தின் விலை

10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை = ரூ.30,000

1 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை = ரூ 3,000

தங்கப் பொருளின் எடை: 20 கிராம்

செய்கூலி= ரூ 300/கிராம்

ஜிஎஸ்டி= 3%

எனவே, நகைகளின் மொத்த விலை: ரூ. 3,000 x 20 கிராம் + (20 கிராம் x ரூ. 300) = ரூ. 66,000

இந்த மொத்த விலையில் ஜிஎஸ்டி 3 சதவீகிதத்தைப் பயன்படுத்தும்போது, நீங்கள் பெறுவது,

ரூ.66,000 + 3% = ரூ.67,980.

எனவே, இந்த நகை வாங்குவதற்கு ரூ.67,980 செலுத்த வேண்டும்.

இந்தியாவில் தங்க நகைகளின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
அழியப்போகும் KGF: ஆந்திராவில் கொட்டிக்கிடக்கும் தங்கம் - மத்திய அரசின் பிளான் என்ன?

நகைகளை வாங்கும் போது, ஒவ்வொரு கடையிலும் தங்கத்தின் விலைகள் மாறுப்பட்டிருப்பதைக் காணலாம்.

தங்கத்தின் விலை அதன் காரட்டில் மற்றும் எடையில் ஒரே மாதிரியாக இருந்தாலும், சந்தையில் ஒவ்வொரு தங்கப் பொருளுக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தங்க நகைகளின் விலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
நம் வீட்டில் எவ்வளவு தங்கம், பணம் வைத்திருக்கலாம்? தங்கத்துக்கு வரி கட்டவேண்டுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com