Parachute Oil : தேங்காய் எண்ணெய் உலகின் முன்னோடி - பின்னணியில் இருக்கும் ஆச்சரிய வரலாறு!

அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிளாஸ்டிக்கில் தேங்காய் எண்ணெய் விற்பது மிகவும் மோசமான திட்டம் என அறிக்கை வந்தது.
Parachute Oil
Parachute OilTwitter
Published on

மக்கள் தினமும் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தும் FMCG பொருட்கள் உலகில், அனைவராலும் அறியப்படும் ஒரு பொருள் என்றால் அது பாராசூட் தேங்காய் எண்ணெய்.

மூன்றில் ஒரு இந்தியன் பாராசூட் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதாக தரவுகள் கூறுகின்றன.

பாராசூட் எண்ணெயின் தயாரிப்பு நிறுவனமான மாரிகோ நிறுவனம்தான் தேங்காய் எண்ணெய் பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனைக்கு வர முக்கிய காரணம் என்பது நம்மில் பெரும்பாலோனோருக்கு தெரியாத ஒரு விஷயம்.

எப்படி பாராசூட் தேங்காய் எண்ணெய் உலகில் ஒரு முன்னோடியாக இருக்கிறது?

1980களில் தேங்காய் எண்ணெய் தகர டப்பாக்களிலேயே சந்தையில் விற்பனை ஆனது.

பாராசூட் நிறுவனமும் முதலில் அவ்வாறே விற்பனை செய்து கொண்டிருந்தனர். உற்பத்தி விலையைக் குறைக்கவும் பொருளின் காலாவதி தேதியை நீடிக்கவும் பிளாஸ்டிக் டப்பாக்களில் தேங்காய் எண்ணெயை விற்கலாம் என மாரிகோ நிறுவனம் முடிவு செய்தது.

எந்த ஒரு நிறுவனமும் சந்தையில் விற்கப்படும் பொருளில் ஏதாவது மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் அதற்கு முன்பு சந்தையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவர்.

அவ்வாறு ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் பிளாஸ்டிக்கில் தேங்காய் எண்ணெய் விற்பது மிகவும் மோசமான திட்டம் என அறிக்கை வந்தது.

பிளாஸ்டிக் டப்பாக்களில் தேங்காய் எண்ணெய்யை விற்க முயற்சித்தபோது எலிகள் டப்பாக்களை தின்றதால் எண்ணெய் பிற பொருட்களில் பட்டு மற்ற பொருட்களும் சேதமடைந்ததாக ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

Parachute Oil
இன்றைய புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் தயாரிப்பு என்ன? - ஆச்சரியமூட்டும் தகவல்

மேலும் எலிகளுக்கு தேங்காய் எண்ணெயில் போட்ட பிளாஸ்டிக்கின் சுவை மிகவும் பிடித்திருந்ததாகவும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்தன.

ஆனால் மனம் தளராத மாரிகோ நிறுவனத்தின் உரிமையாளர் ஹர்ஷ் மேரிவாலா இதற்கு தீர்வு கண்டுபிடிக்க முயற்சித்தார்.

இதனால் பாராசூட் எண்ணெய் டாப்பக்களை தற்போது இருக்கும் உருளை வடிவில் வடிவமைத்தார். இதை சந்தையில் அறிமுகப்படுத்தும்முன் பல எலிகளிடம் ஆய்வுக்கு கொடுத்தும் பார்த்தார்.

சில எலிகள் கொறிக்க முயற்சி செய்து பார்த்தது. ஆனால் எலிகளுக்கு சரியான க்ரிப் கிடைக்கவில்லை. பல எலிகள் பாட்டிலை தொடக்கூடவில்லை.

இந்த ஆய்வு வெற்றி பெற்றதும் சந்தையில் இதனை அறிமுகப்படுத்தி நுகர்வோர் மற்றும் கடைக்காரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார் ஹர்ஷ் மேரிவாலா.

அதன்பிறகு பல நிறுவனங்கள் தேங்காய் எண்ணெயின் பாட்டில்களை மாற்றினர். பிற்காலத்தில் இதனால் தனது 20 சதவீத சந்தையை இழந்து பின்னர் வேறொரு யுக்தியின் மூலமாக அதிலிருந்து மீண்டது பாராசூட் தேங்காய் எண்ணெய்.

Parachute Oil
கூகுள் முதல் கோலா வரை: புகழ் பெற்ற பிராண்ட்களின் முதல் பெயர் என்ன தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com