சபரிமலைக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.
மண்டல மற்றும் மகர பூஜைகள் நடைபெறுவதால் பக்தர்கள் அங்கு அலைமோதுகின்றனர்.
இந்த சமயத்தில் சபரிமலை கோயிலின் வருவாயை திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்தப் பருவம் தொடங்கிய 39 நாள்களில் (அதாவது டிசம்பர் 25 ஆம் தேதி வரை) ரூ.200 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தேவஸ்தானத்தின் தலைவர் பி.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
காணிக்கையாக செலுத்தப்பட்டசில்லறைகள் எண்ணப்படும்போது இதன் மதிப்பு இன்னும் அதிகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மொத்த வருவாயான ரூ. 204.30 கோடியில் ரூ.63.89 கோடி பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அரவணை பாயாசம் விற்பனையின் மூலம் ரூ.96.32 கோடியும் அப்பம் விற்பனையின் மூலம் ரூ.12.38 கோடியும் ஈட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறை 31 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மண்டல பூஜைக்குப் பின்னர் கோயில், புதன்கிழமை இரவு 11 மணியோடு மூடப்படவுள்ளது. அதன் பிறகு டிசம்பர் 30 ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும். ஜனவரி 15ஆம் தேதி சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust