கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டலம்-மகரவிளக்கு யாத்திரை மத ஒற்றுமையின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது.
யாத்ரீகர்கள், பாரம்பரிய கருப்பு உடையை அணிந்து எல்லைகளுக்கு அப்பாற்பட்ட பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இந்த பயணத்தின் போது பக்தர்கள் மசூதி, தேவாலயம் மற்றும் கோவில் என ஒன்றிணைக்கின்றனர். எப்படி என்று யோசிக்கிறீர்களா?
கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் என்றும் அழைக்கப்படும் வாவர் மசூதிக்கு சபரிமலை பக்தர்கள் செல்வது, பயணக் கதையின் சிறப்பாகும்.
இந்த மசூதி இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நீடித்து வரும் நல்லிணக்க உணர்விற்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. சபரிமலைக்கு ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கும் முன் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
இந்த யாத்திரை பாதையில் மற்றொரு நிறுத்தம் ஆலப்புழாவில் உள்ள அர்த்துங்கல் செயின்ட் ஆண்ட்ரூஸ் பசிலிக்கா தேவாலயம்.
பல தசாப்தங்களாக, இந்த தேவாலயம் ஐயப்பன் பக்தர்களை வரவேற்கிறது. 'சுவாமியே சரணம் ஐயப்பா' என உச்சரித்து, இந்து யாத்ரீகர்கள் மசூதி மற்றும் தேவாலயத்திற்கு மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்கு பின்னால் பல புராண கதைகள் இருக்கின்றன. ஐயப்பனின் முஸ்லீம் நண்பரான வாவரின் கதையையும், ஐயப்பனுக்கும் கிறிஸ்தவ பாதிரியாரான அர்த்துங்கல் வேலுதச்சனுக்கும் இடையே ஆழமான நட்பையும் இந்த யாத்திரை பயணம் பிரதிபலிக்கிறது. மத நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாக இந்த யாத்திரை விளங்குகிறது.
வருடாந்திர யாத்திரை காலங்களில், வாவர் மசூதியில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மசூதியின் நிர்வாகம் பயணிகளுக்கு பார்க்கிங் வசதிகள் படுக்கை விரிப்பு இடங்கள் போன்ற அத்தியாவசிய வசதிகளை வழங்குகிறது.
உலகின் பல பகுதிகளை கறைபடுத்திய மத போராட்டங்கள் இருந்தபோதிலும், சபரிமலை யாத்திரை பாதை, மசூதி, தேவாலயம் மற்றும் கோவிலால் ஒன்றிணைந்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust