2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம் - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?

ரிசர்வ் வங்கி பல்வேறு வகையான நோட்டுகளை அச்சிடுகிறது. ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் அச்சிடுவதற்கான செலவு மாறுபடும். ஒரு 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க தோராயமாக 4 ரூபாய் செலவாகும். 2018ல் ரூ.2,000 நோட்டை அச்சடிக்க ரூ.4.18 செலவனது பின்னர் அது ரூ.3.53 ஆக குறைந்தது.
2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம்  - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?
2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம் - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?Twitter
Published on

இந்த ஆண்டு மே மாதம் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி பல்வேறு வகையான நோட்டுகளை அச்சிடுகிறது. ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்கும் அச்சிடுவதற்கான செலவு மாறுபடும். ஒரு 2000 ரூபாய் நோட்டை அச்சடிக்க தோராயமாக 4 ரூபாய் செலவாகும். 2018ல் ரூ.2,000 நோட்டை அச்சடிக்க ரூ.4.18 செலவனது பின்னர் அது ரூ.3.53 ஆக குறைந்தது.

RBI
RBITwitter

10 ரூபாய் நோட்டுகள் 1000 அச்சடிக்க 960 ரூபாய் செலவாகும்.

இப்படி இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.

  • 100 ரூபாய் 1,000 நோட்டுகளை அச்சடிக்க 1,770 ரூபாய்.

  • 200 ரூபாய் 1,000 நோட்டுகளை அச்சடிக்க 2,370 ரூபாய்.

  • 500 ரூபாய் நோட்டுகள் 1,000 அச்சடிக்க 2,290 ரூபாய்.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, மே 19ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடி. இதில் ரூ.3.42 லட்சம் கோடி வங்கிகளுக்குத் திரும்பியுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம்  - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?
அரசின் மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

செப்டம்பர் 29ஆம் தேதி நிலவரப்படி ரூ.14 ஆயிரம் கோடி மட்டுமே புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 8ஆம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, “மே 19, 2023 வரை புழக்கத்தில் இருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் 96 சதவீதம் திரும்பி வந்துவிட்டன.” மேலும், அக்டோபர் 8ஆம் தேதி முதல் வங்கிக் கிளைகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யும் அல்லது மாற்றும் செயல்முறை நிறுத்தப்படும் என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகள் நீக்கம்  - இந்திய கரன்சி நோட்டுகளை அச்சடிக்க எவ்வளவு செலவாகும்?
இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படம் பயன்படுத்த காரணம் என்ன? | Explained

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com