அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை?

பணக்காரர் ஏழை என்பதற்கு நடுவில் பல அடுக்குகள் இருக்கின்றன. மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் எனக் கூறுவோம். கடினமாக உழைத்து நம்மை விட உயர்ந்த ஒரு கிளாஸை அடைய வேண்டும் என்பது தான் பலருக்கும் கனவாக இருக்கிறது. பின்னர் அங்கிருந்து அடுத்தக் கூட்டத்தில் இணைய முனைவோம்.
அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை?
அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை?Twitter
Published on

நம்மைச் சுற்றிலும் பலர் பணக்காரர்களாக இருப்பதைப் பார்கிறோம். பலர் லட்சாதிபதிகள், சிலர் கோடீஸ்வரர்கள்.

நம் சமூகத்தில் மக்கள் பணத்தின் அடிப்பையில் பெரியவர் சிறியவர் என வகைப்படுத்தப்படுகின்றனர். பணக்காரர்களுக்கு எல்லாமும் கிடைக்கும் ஏழைகள் எல்லாவற்றுக்கும் போராட வேண்டும்.

பணக்காரர் ஏழை என்பதற்கு நடுவில் பல அடுக்குகள் இருக்கின்றன. மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் எனக் கூறுவோம்.

கடினமாக உழைத்து நம்மை விட உயர்ந்த ஒரு கிளாஸை அடைய வேண்டும் என்பது தான் பலருக்கும் கனவாக இருக்கிறது. பின்னர் அங்கிருந்து அடுத்தக் கூட்டத்தில் இணைய முனைவோம்.

இந்தியா மக்கள் தொகையில் டாப் 1% பணக்காரர்கள் கூட்டத்தில் இணைய நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் தெரியுமா? உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ரான்க் நிறுவனம் இதற்கான பதிலைக் கண்டறிந்துள்ளது.

நைட் ஃப்ரான்க் நிறுவனம் வெளியிட்ட "வெல்த் ரிப்போர்ட் 2023" உலக நாடுகளில் உள்ள டாப் 1% பணக்காரர்கள் கூட்டத்தில் இணைய எவ்வளவு செல்வம் நமக்குத் தேவை எனக் கூறியுள்ளது.

இந்த அறிக்கையின் படி, மோனோக்கோ நாட்டில் உள்ள செல்வந்தர்கள் கூட்டத்தில் இணைய தான் அதிகபணம் தேவைப்படுகிறது.

அதிக பணக்காரர்கள் இருக்கும் இந்த நாட்டில் உள்ள 1% பணக்காரர்களில் ஒருவராக இருக்க நமக்கு 12.4 மில்லியன் அமெரிக்க டாலர்காள் தேவை. இந்திய மதிப்பில் 102 கோடி ரூபாய்.

அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் உள்ளன. அங்கு முறையே 54 கோடி ரூபாய் மற்றும் 45 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருந்தால் தான் டாப் 1% பணக்காரராக இருப்போம்.

அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை?
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

ஆசியாவைப் பொருத்தவரை சிங்கப்பூரில் அதிகபட்சமாக 28 கோடி ரூபாய் இருந்தால் நாம் 1% பணக்காரர்கள் பட்டியலில் இருக்கலாம்.

நம் இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களில் ஒருவராக இருக்க வேண்டுமெனில் நம்மிடம் 1.44 கோடி ரூபாய் சொத்து இருக்க வேண்டும்.

அதாவது நம்மைச் சுற்றி 1.44 கோடியை விட அதிகமாக பணம் வைத்திருக்கும் யாவரும் அந்த டாப் 1% பணக்காரர்களில் ஒருவர்.

இந்தியாவில் இருக்கும் 142 கோடி மக்களில் 1.4 கோடி பேர் மட்டும் தான் 1.44 கோடியை விட அதிகபணம் வைத்திருப்பதாக அந்த அறிக்கைக் கூறுகிறது.

அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை?
பணக்காரர் பட்டியலில் இருந்து வெளியேற விரும்பும் பில் கேட்ஸ் - என்ன காரணம்?

உலக அளவில் இந்த டாப் 1% பணக்காரர் சமூகத்தில் நுழைவதற்கான மதிப்பு கென்யாவை விட மோனாக்கோவில் 200 மடங்கு அதிகம்.

அமெரிக்காவின் டாப் 1% பணக்காரராக இருக்க வேண்டுமென்றால் நமக்கு 42 கோடி ரூபாய் தேவை. யுனைட்டட் அரபு எமிரேட்ஸில் 13 கோடி. தென்னமெரிக்க நாடுகளில் அதிகபட்சமாக அர்ஜென்டினாவில் 3.5 கோடி.

இது உலக நாடுகளுக்கு இடையில் இருக்கும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளைக் காட்டுகிறது. இந்த சமத்துவமில்லாத நிலை மாற வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்கிறது.

அதானி, அம்பானியுடன் இந்தியாவின் டாப் 1% பணக்காரர் பட்டியலில் இணைய எவ்வளவு செல்வம் தேவை?
Elon Musk : உலக பணக்காரர் வாழும் சிறிய 3BHK வீடு - ஏன் இதை தேர்வு செய்தார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com