எதிர்கால இந்தியா : பாதுகாப்பிற்காகப் போராடும் சுற்றுச்சூழல் போராளிகள்

பல ஆண்டுகளாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்தியாவின் போராளிகள் சிலர் அயராது பாடுபடுகின்றனர்.
சுனிதா நாராயண்
சுனிதா நாராயண்NewsSense
Published on

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலக்கரி மற்றும் எண்ணெய் போன்ற புதைபடிவ எரிபொருட்கள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டதிலிருந்து, பூமி இப்போது கிட்டத்தட்ட 1 டிகிரி செல்சியஸ் வெப்பமடைந்துள்ளது.

புவி வெப்பமடைதல் என்ற அச்சம் நம்மை ஆட்டிப் படைக்கும் நிலையில், மாறிவரும் காலநிலை அமைப்பு பல லட்சம் மக்களை இடம் பெயரச் செய்வதோடு வனவிலங்குகளை அழித்தும் வருகிறது. இயற்கை மீதான இந்த கண்மூடித்தனமான நமது சுரண்டல் உலகிற்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை நோக்கிச் செயல்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்தியாவின் போராளிகள் சிலர் அயராது பாடுபடுகின்றனர். அவர்களில் சிலரைத் தெரிந்து கொள்வோம்.

சுந்தர்லால் பகுகுணா

சுந்தர்லால் பகுகுணா ஒரு இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சிப்கோ இயக்கத்தின் முக்கிய தலைவர் ஆவார். இமயமலைக் காடுகளைப் பாதுகாப்பதற்காகப் போராடினார். சிப்கோ இயக்கத்தின் உறுப்பினராக 1970 இல் முதல் போராடினார். பின்னர் 1980 முதல் 2004 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை அவர் தெஹ்ரி அணை எதிர்ப்பு இயக்கத்தை வழிநடத்தினார்.

இந்தியாவின் ஆரம்பக்கால சுற்றுச்சூழல் ஆர்வலர்களில் ஒருவர் என்று அவரைச் சொல்லலாம்.

சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், இமயமலை மக்கள் மற்றும் இந்தியாவின் நதிகளின் தீவிர பாதுகாவலராகவும் இருந்த அவர், மலைவாழ் மக்களின், குறிப்பாக உழைக்கும் பெண்களின் அவலத்தைப் போக்கப் பாடுபட்டார். அவர் சமூக இயக்கங்களுடனும் அதற்கு முன் ஜாதி பாகுபாட்டிற்கு எதிரான போராட்டத்துடனும் தொடர்புடையவர். காந்தியடிகளால் ஈர்க்கப்பட்டு, இமயமலையின் காடுகள் மற்றும் மலைகளில் 4,700 கி.மீ.க்கு மேல் நடந்தார். இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினாலும் அவர் அதை மறுத்துவிட்டார்.

சுனிதா நாராயண்

சுனிதா நாராயண் இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார். அவர் தற்போது அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் ஜெனரலாகவும், டவுன் டு எர்த் என்ற இரு வார இதழின் ஆசிரியராகவும் உள்ளார். அவர் மழைநீர் சேகரிப்பு மற்றும் சமூக அடிப்படையிலான நீர் மேலாண்மை முன்னுதாரணங்களை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றினார்.

பல பத்தாண்டுகளாக, அவர் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு கவனத்தை ஈர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். நீர் தொடர்பான பிரச்னைகள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள் போன்றவற்றில் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார்.

2005 ஆம் ஆண்டில், பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், அவர் புலிகள் பணிக்குழுவை வழிநடத்தினார். இது சரிஸ்கா புலிகளின் இழப்புக்குப் பிறகு நாட்டின் புலி பாதுகாப்புக்கான செயல் திட்டத்தை உருவாக்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகள் தவிர, நக்சலிசம், அரசியல் ஊழல், புலி மற்றும் மர பாதுகாப்பு மற்றும் பிற சமூகப் பிரச்னைகள் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துகிறார். அதே ஆண்டில், அவருக்கு இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

மாரிமுத்து யோகநாதன்

மாரிமுத்து யோகநாதன் இந்தியாவின் மர மனிதர் மற்றும் பசுமை வீரர் என்றும் அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் இவர், சுற்றுச்சூழல் ஆர்வலராகப் பெயர் பெற்றவர். அவர் சுமார் 3 மில்லியன் மரக் கன்றுகளை நட்டு தனது சிறப்பான பணிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த காலணி நிறுவனமான டிம்பர்லேண்டின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

யோகநாதன் சுமார் 3,743 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்குச் சென்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக மாணவர்களின் பிறந்தநாளில் மரக்கன்றுகள் நடும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவருக்கு இந்திய அரசால் "சுற்றுச்சூழல் வாரியர்" விருது வழங்கப்பட்டது.

சுனிதா நாராயண்
நம் பூமி சந்திக்கக் காத்திருக்கும் 8 மிகப்பெரிய பேரழிவுகள் - விரிவான தகவல்கள்

தியா மிர்சா

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துரைப்பதில் தியா மிர்சா வலுவாக குரல் கொடுத்து வருகிறார். "நமது கிரகத்தை நாம் 8 மில்லியன் உயிரினங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். இந்த உயிரினங்கள் நமது வாழ்க்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. இயற்கையுடனான நமது உறவு, இயற்கையை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதெல்லாம் நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை வரையறுக்கும்" என்று தி வெதர் சேனலுக்கு அளித்த பேட்டியில் மிர்சா கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர்-தயாரிப்பாளராக இருக்கும் மிர்சா ஐ.நா.சுற்றுச்சூழல் பிரிவின் நல்லெண்ண தூதராகவும், ஐ.நா பொதுச்செயலாளரின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான பிரச்சாரகராகவும், இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளையின் தூதராகவும் இருந்து வருகிறார். மிர்சா அடிக்கடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் சூழலியல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மக்களைப் பங்கேற்குமாறு ஊக்குவிக்கவும் செய்கிறார். சூழலியில் குறித்த பால பாடங்களை அறிந்து கொள்ள நீங்கள் முடிவு செய்தால் மிர்சாவின் இன்ஸ்டா கிராம் பக்கம் உங்களுக்கு உதவும்.

சுனிதா நாராயண்
காலநிலை மாற்றம்: போர் இல்லாமல் இந்த புவி வாழ்க்கை அழியப் போகிறதா ?

வந்தனா சிவா

இவர்தான் உண்மையிலேயே ஒரு சுற்றுச்சூழல் போராளி. ஒரு இந்திய அறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இருக்கிறார் வந்தனா ஷிவா. பசுமைக்கான உலகின் பிரச்சாரத்தில் முன்னணி குரலாக அவர் பேசப்படுகிறார். அவரது மிகவும் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் ஒன்று Ecofeminism. அந்நூலில் அவர் சூழலியில் பாதுகாப்பிற்கான சமூக இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பை வலியுறுத்துகிறார்.

ஷிவாவின் புகழ்பெற்ற வார்த்தைகள், "ஒன்று பெண்கள் தலைமையில் பூமியுடன் சமாதானம் செய்ய வழிவகுக்கும் எதிர்காலத்தைப் பெறப் போகிறோம் அல்லது மனிதகுலத்திற்கு எதிர்காலம் என்பது இல்லை". இது உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் சமூக உறுப்பினர்களிடத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. வந்தனா ஷிவா எழுதிய Earth Democracy; Justice, Sustainability, and Peaceபோன்ற புத்தகங்கள் சுற்றுச்சூழலை நோக்கிய உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக இருக்கும்.

சுனிதா நாராயண்
ராஜேந்திர சிங், ஷிரிஷ் ஆப்தே: இந்தியாவின் 5 தண்ணீர் போராளிகள் - விரிவான தகவல்

சுமைரா அப்துல்அலி

கடலோர மற்றும் நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் பணிக்காக சுமைரா அப்துல்லி மிகவும் பிரபலமானவர் . தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆவாஸ் அறக்கட்டளையின் நிறுவனர்.

அப்துல்அலி, பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த ஆதாரமான, எளிமையான கல்வித் திட்டங்கள் மூலம் பசுமை வாழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்த தொடர்ந்து பணியாற்றுகிறார். மும்பையில் ஒலி மாசுபாடு போன்ற பிரச்சினைகளைத் தணிக்க, அப்துல்அலி, இறுதியில் கடுமையான சட்டங்களை அமல்படுத்த உள்ளூர் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க முடிந்தது.

நார்மா அல்வாரெஸ்

கோவாவில் வசிப்பவர் மற்றும் சக காலநிலை மாற்ற ஆர்வலரை மணந்த நார்மா அல்வாரெஸ் நீண்ட காலமாக இந்தியாவில் சுற்றுச்சூழல் செயல்பாட்டில் முன்னணியில் இருந்து வருகிறார். அவர் கோவா அறக்கட்டளையின் நிறுவன உறுப்பினர், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் நடவடிக்கை குழு மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

கோவாவில் குன்றுகள் மற்றும் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காகப் போராடுவது முதல் விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாப்பது வரை பல பணிகளைச் செய்து வருகிறார். மேலும் அவர் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதில் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார்.

KALINGA

ஜமுனா துடு

சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராடும் தீவிரமான குரல்களில் ஒருவரான ஜமுனா துடு, "லேடி டார்சான்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். ஜார்க்கண்டில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவதை தடுக்கும் வகையில், பெண்களின் குழுவை இந்த ஆர்வலர் ஏற்பாடு செய்து வழி நடத்தினார்.

பத்மஸ்ரீ மற்றும் இந்தியாவை மாற்றும் பெண்கள் போன்ற விருதுகளுடன் இந்தியா முழுவதும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அவரது துணிச்சல் மற்றும் முயற்சிகளுக்காக துடு பலராலும் பாராட்டப்படுகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com