எல்லாவற்றிலும் கலப்படங்கள் வந்துவிட்டன. குறிப்பாக உணவுப் பொருட்களின் தரத்தில், கடுகு உடன் பப்பாளி விதை , அரசியில் பிளாஸ்டிக் ரைஸ் என பல உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறது.
தற்போது இந்த போலி அரிசி சந்தையில் அதிகமாக விற்கப்படுகிறது. இந்திய சந்தைகளில் பிளாஸ்டிக் அரிசி நுழைந்துவிட்டதாக இந்தியர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள மளிகைக் கடைகளில் போலி சீன அரிசி விற்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இவற்றை சாப்பிட்ட பிறகு மனித உடலுக்குள் பாதிப்பு ஏற்படுகிறது.
பிளாஸ்டிக் என்பது மக்காத, செரிக்காத ஒரு பொருள். அத்தகைய உணவு பொருளை நாம் சாப்பிடும் போது, என்ன ஆகும் என்று நினைத்துப்பாருங்கள். நன்றாக இருக்கும் உடல்நிலை கூட சரியில்லாமல் போகும். இந்த போலி அரிசியை வீட்டிலேயே அடையாளம் காண்பதற்கு சில வழிகள் உள்ளன. அது குறித்து தான் இந்த பதவில் தெரிந்துகொள்ள போகிறோம்.
எரித்து சோதிப்பது :
அரிசியின் சில தானியங்களை எடுத்து தீயால் எரிக்கவும், அசல் அரிசி எரிந்து சாம்பலாகும். பிளாஸ்டிக் அரிசி சீக்கிரம் தீப்பிடித்தாலும் அது உருகும், நெகிழி ( பிளாஸ்டிக்) வாசம் வரும்.
வேகவைத்து சோதிப்பது:
ஒரு பாத்திரத்தில் அரிசியை வைத்து தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள். அசல் அரிசி என்றால் மென்மையாக மாறி வெந்து சாதம் வாசனையை உருவாக்கும். ஆனால் பிளாஸ்டிக் அரிசி, நீண்ட நேரம் கொதித்த பிறகும் கடினமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதிலிருந்து இரசாயன வாசனை வரும்.
கிளாஸ் தண்ணீரில் சோதிப்பது:
அடுத்த முறை சமைக்காத அரிசியை ஒரு கைப்பிடி எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். பின் அதை நன்றாக கிளறவும். அரிசி கீழே மூழ்கினால், அந்த அரசி உண்மையானது.
அதாவது உண்மையான அரிசி தண்ணீரை உறிஞ்சி கனமாகிறது, இதனால் அது மூழ்கிவிடும். நீரின் மேற்பரப்பில் அரிசி மிதந்தால், அது பிளாஸ்டிக் அரிசி. பிளாஸ்டிக் அரிசி அடர்த்தி குறைவாக இருக்கும், எனவே மிதக்கும்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust