அரிசி ஏற்றுமதியை தடை செய்த இந்தியா; ஏன்? இதனால் எந்தெந்த நாடுகளுக்கு பாதிப்பு? | Explained

அனைத்து உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. எனவே இந்த முடிவு அரிசி இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
Why India Banned Export of Non-basmati White Rice and How it is Affecting Americans | EXPLAINED
Why India Banned Export of Non-basmati White Rice and How it is Affecting Americans | EXPLAINEDTwitter
Published on

இந்திய அரசாங்கம் சமீபத்தில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. நாட்டில் ஏற்ற இறக்கமான சில்லறை விற்பனை விலையை நிலைப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கவலை தெரிவிக்கின்றன. உலகளவில் உணவு விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் ஜூலை 20 அன்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய சந்தையில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி போதுமான அளவு கிடைப்பதை உறுதிசெய்யவும், உள்நாட்டு சந்தையில் விலை உயர்வைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. சில்லறை விலைகள் ஒரு வருடத்தில் 11.5% மற்றும் கடந்த மாதத்தில் 3% அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கூறியது.

நாட்டில் அதிகரித்து வரும் உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த ஏற்றுமதி தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடையானது உலகளவில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவது மட்டுமல்லாமல், அமெரிக்காவில் உணவு விநியோகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு சுமையாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கில் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக நாட்டில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

வட இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் புதிதாக பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்து பல விவசாயிகள் மீண்டும் நடவு செய்ய வேண்டியிருந்தது. நெல் வளரும் மற்ற மாநிலங்களில் போதுமான மழை இல்லாததால் நாற்றுகளை நடவு செய்ய முடியவில்லை இதனால் நாட்டில் அரசியின் விலை அதிகரித்துள்ளது.

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த அரிசியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி 25 சதவீதமாக உள்ளது.

எந்தெந்த நாடுகள் பாதிக்கப்படலாம்?

அனைத்து உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்தியா கொண்டுள்ளது. எனவே இந்த முடிவு "அரிசி இறக்குமதியை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளில் உணவு பற்றாக்குறையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது" என்று தரவு பகுப்பாய்வு நிறுவனமான க்ரோ இண்டலிஜென்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தடையால் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, சிரியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அடங்கும், அவை ஏற்கனவே பணவீக்கத்துடன் போராடி வருகின்றன.

கினியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இந்திய அரிசியை அதிகம் வாங்குபவர்கள் உள்ளனர்.

Why India Banned Export of Non-basmati White Rice and How it is Affecting Americans | EXPLAINED
கற்கள் முதல் அழுகிய முட்டை வரை : உலக நாடுகளில் உண்ணப்படும் சில விசித்திர உணவுகள்!

உலகளாவிய தேவையால், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் இந்திய ஏற்றுமதி, இரண்டாவது காலாண்டில் ஆண்டுக்கு 35 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா கடந்த ஆண்டு 10.3 மில்லியன் டன் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்தது.

தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இவற்றுக்குப் பதிலாக போதுமான அரிசி இல்லை. இந்தியா ஏற்கனவே கோதுமை மற்றும் சர்க்கரை விலையை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஏற்றுமதியை கட்டுப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கர்களுக்கு என்ன பாதிப்பு?

இந்தியாவில் ஏற்றுமதி தடை அறிவிக்கப்பட்டவுடன், அரிசியை பிரதான உணவாக உட்கொள்ளும் ஆசிய சமூகங்கள், கடைகளில் குவிந்ததால், அமெரிக்காவில் அனைத்து வகையான அரிசிப் பைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

தி ஃப்ரண்ட்லைனில் ஒரு அறிக்கையின்படி, தடை விதிக்கப்பட்ட மறுநாளே பாஸ்மதி உள்ளிட்ட அனைத்து வகை அரிசிகளை மக்கள் வாங்கிவிட்டனர்.

இதற்கிடையில், டெக்சாஸ் போன்ற அமெரிக்காவின் பிற மாநிலங்களில், விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Why India Banned Export of Non-basmati White Rice and How it is Affecting Americans | EXPLAINED
காலநிலை மாற்றத்தால் காணாமல் போகும் இந்த உணவுகள் குறித்து தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com