உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் இருக்கா? எப்படி மெயின்டெயின் செய்வது?

இந்த இன்வெர்ட்டர் நமது வீடுகளில் இருந்தால், மற்ற மின்னணு சாதனங்களை போல இதற்கும் மெயின்ட்டனன்ஸ் தேவை தானே? அதற்கு என்ன செய்யவேண்டும்? இந்த பதிவில்...
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் இருக்கா? எப்படி மெயின்டெயின் செய்வது?
உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் இருக்கா? எப்படி மெயின்டெயின் செய்வது?canva
Published on

முன்பெல்லாம் மின்சாரத் தடை ஏற்பட்டால், திரும்ப கிடைக்கும் வரை காத்திருந்தோம். மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் கூட மின்சாரம் திரும்ப கிடைக்க வெயிட் செய்திருப்போம்.

ஆனால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்மை, ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்ற சாதனங்களுக்கு அருகில் கூட்டிச் சென்றது.

நம் வீட்டில் குறிப்பிட்ட லைட்கள், ஃபேன்கள், பிளக் பாயின்ட்களுக்கு, நாம் இன்வர்ட்டரின் கனெக்ஷனை கொடுத்திருப்போம்.

கரன்ட் கட் ஆகும் சமயத்தில் ஒரு ஸ்விட்சை தட்டினால், இன்வர்ட்டர் சேகரித்து வைத்த மின்சாரத்தை கொடுக்கும்.

இந்த இன்வெர்ட்டர், நமது வீடுகளில் இருந்தால், மற்ற மின்னணு சாதனங்களை போல இதற்கும் மெயின்ட்டனன்ஸ் தேவை தானே?

அதற்கு என்ன செய்யவேண்டும்? இந்த பதிவில்...

இன்வர்ட்டருடன் ஒரு பேட்டரி இருக்கும். இதில் நிரப்பப்படும் தண்ணீர், இந்த சாதனத்தின் செயல்பாட்டிற்கு மிக அவசியமாகிறது.

இந்த பேட்டரியில், குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீரை மாற்றவேண்டும். அவ்வப்போது தண்ணீரை நிரப்புவதும் அவசியமாகிறது.

இதில் நிரப்ப டிஸ்டில்டு தண்ணீர், அதாவது காய்ச்சி வடிகட்டப்பட்ட தண்ணீர் தனியாக எலக்டிரானிக் கடைகளில் கிடைக்கும். இதை ஒரு வகையில் சுத்தமான தண்ணீர் எனலாம். இந்த தண்ணீர் உட்கொள்ளக்கூடாது.

இந்த டிஸ்டில்டு தண்ணீரை மட்டும் தான் இன்வர்ட்டருக்கு பயன்படுத்தவேண்டும்.

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் இருக்கா? எப்படி மெயின்டெயின் செய்வது?
பிளாஸ்டிக் ஸ்டூல் நடுவில் துளை இருப்பது ஏன்?

இந்த தண்ணீர் மாற்றம் என்பது, இன்வர்ட்டரின் ஆயுள் காலத்தையும் முடிவுசெய்கிறது.

குறைந்தது 45 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீரின் அளவை சரிபார்த்தல் அவசியம். இன்வர்ட்டரில் தண்ணீரின் அளவுகோல் பச்சை நிறத்தில் இருந்தால், போதுமான அளவு தண்ணீர் இருப்பதை அது குறிக்கும்.

இந்த அளவு சிவப்பு கோட்டை தொடுகையில், தண்ணீர் மாற்ற, அளவு குறைந்ததை அது குறிக்கும்.

தண்ணீரை நிரப்பும் முன், பிளக் பாயின்ட்களில் பிளக் இருந்தால், ஸ்விட்சை ஆஃப் செய்வது அவசியமாகிறது.

மேலும் இந்த டிஸ்டில்டு தண்ணீரை மாற்றும்போது கைகளில் கையுறை இருப்பது அவசியம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த தண்ணீர் கையில் பட்டால், சரும பிரச்சினைகள் ஏற்படலாம்

உங்கள் வீட்டில் இன்வர்ட்டர் இருக்கா? எப்படி மெயின்டெயின் செய்வது?
பாம்பும் கீரியும் சண்டையிடுவது ஏன்? இவை இயற்கையாகவே எதிரிகளா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com