கர்நாடகாவில் கொண்டாடப்படும் ’கிச்சடி திருவிழா’ - பக்தர்கள் குவிய காரணம் என்ன?

இந்த பாரம்பரியம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து கைப்பிடி அரிசியுடன் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடக்கும் திருவிழாவில் சுமார் 210 குவிண்டால் அரிசி கிச்சடி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
In Karnataka's Bagalkote, This Khichdi Festival Uses 210 Quintals Of Rice
In Karnataka's Bagalkote, This Khichdi Festival Uses 210 Quintals Of RiceTwitter
Published on

கோவில்களில் பிரசாதமாக பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம், லட்டு என பல உணவுப் பொருட்கள் பிரசாதமாக வழங்குவதை கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் இங்கு ஒரு கோவிலில் கிச்சடி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் உள்ள பிரபு லிங்கேஸ்வரர் கோவிலில் தான் கிச்சடி திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்த பாரம்பரியம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து கைப்பிடி அரிசியுடன் தொடங்கியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடக்கும் திருவிழாவில் சுமார் 210 குவிண்டால் அரிசி கிச்சடி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

பின்னர் அது பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. அரிசி பெலகாவியில் இருந்தும், பருப்பு ஹுப்பாலியிலிருந்தும், மசாலாப் பொருட்கள் விஜயபுராவில் இருந்தும் கொண்டு வரப்படுகிறது.

இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

In Karnataka's Bagalkote, This Khichdi Festival Uses 210 Quintals Of Rice
ஆண்களை பெண்கள் குச்சியால் துரத்தி துரத்தி அடிக்கும் வினோத திருவிழா - எங்கே?

இந்த பாரம்பரியத்தைச் சுற்றியுள்ள நம்பிக்கைகளின்படி, அதே கிராமத்தில் குயவராக இருந்த ஒரு பாட்டி, பிரபுவுக்கு தினை சார்ந்த பானமான கிச்சடியை வழங்கியதாகவும், கடவுள் பாட்டியின் பக்தியை கண்டு மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த கிச்சடி சாப்பிட்டால் நோய்கள் குறையும் என்பது நம்பிக்கை. கிச்சடி பிரசாதத்தை உட்கொண்டு, பிரபு லிங்கேஸ்வர்ரை வழிபட்டால் நோய்கள் நீங்கி, தங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் இருந்து எல்லாம் பல பக்தர்கள் பிரார்த்தனை செய்ய இந்த இடத்திற்கு வருகின்றனர்.

In Karnataka's Bagalkote, This Khichdi Festival Uses 210 Quintals Of Rice
ஜப்பான்: ஆண்குறி பொம்மைகள் வைத்து வினோத திருவிழா கொண்டாடும் மக்கள் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com