ஆசியக் கோப்பை 2023ன் சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி. இதுவே இதுவரை இந்திய அணி பெற்ற வெற்றிகளில் மிகப்பெரிய வெற்றி.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கியது 2023ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை தொடர். இரு குழுக்களாக மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கிய நிலையில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சூப்பர் ஃபோர் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, மற்றும் சுப்மன் கில் தலா அரைசதம் அடித்து வலுவான தொடக்கத்தையே கொடுத்தனர். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் களத்தில் இணைந்தனர்.
மழையின் காரணமாக போட்டி தடைப்பட்டு ரிசர்வ் டே-க்கு சென்றது. இரண்டாம் நாளில் தொடங்கிய ஆட்டத்தில் கோலி மற்றும் ராகுல் ருத்ர தானடவம் ஆடினர்.
94 பந்துகளில் 122 ரன்கள் குவித்து கோலி தனது 47வது சதத்தை பதிவு செய்தார். மறுபுறம், 111 ரன்கள் எடுத்தார் கே எல் ராகுல். அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் விளையாடும் முதல் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரின் சதத்தால், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 356 ரன்கள் எடுத்திருந்தது.
357 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமானார் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது பாகிஸ்தான்.
குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்திய அணி பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி பதிவு செய்ததில் பெரும் வெற்றி இதுவே.
தனது 47வது ஒரு நாள் சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி, அனைத்து சர்வதேச போட்டிகளையும் சேர்த்து 77 சதங்கள் அடித்துள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 13,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையும் படைத்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp