Virat Kohli: "நான் ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளேன்" மனம் திறந்த கோலி

"நான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதறகு நான் வெட்கப்படவில்லை. ஆனால் நான் எடுத்த எந்த ஒரு முடிவும் என் தனிப்பட்ட நலனுக்காக நான் செய்தது கிடையாது. சுயநலமாக நான் நடந்துகொள்ளவில்லை."
Virat Kohli: "நான் ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளேன்" மனம் திறந்த கோலி
Virat Kohli: "நான் ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளேன்" மனம் திறந்த கோலிtwitter

ஒரு கேப்டனாக செயல்பட்டபோது தான் நிறைய தவறுகள் செய்துள்ளதாக மனம் திறந்துள்ளார் இந்திய அணி வீரர் விராட் கோலி.

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனும் ஆவார் விராட் கோலி. தோனிக்கு பிறகு இந்திய அணியை நெடுங்காலம் தலைமை வகித்து வழிநடத்தியவர்.

ஆனால், கோலி கேப்டன்சியை கையில் எடுத்ததிலிருந்து ஒரு ஐசிசி கோப்பையை கூட இந்திய அணி வெல்லவில்லை. எப்போதும் வெற்றி எட்டாக்கனியாகவே இருந்தது.

இதன் தாக்கமாகவே அவரை கேப்டன்சியிலிருந்து நீக்கினர். அவரும் டெஸ்ட் மற்றும் டி20 தலைமையிலிருந்து தானாக விலகுவதாக தெரிவித்தார். மேலும் இவர் கேப்டனாக இருந்தபோது, இவருக்கும் அப்போதைய பிசிசியை தலைவர் சௌரவ் கங்குலிக்கும் இடையே பிரச்னை இருந்தது எனவும் கூறப்பட்டது.

சமீப காலமாகவே பேட்டிகளில் கோலி தனது கேப்டன்சி அனுபவம் குறித்து அவ்வப்போது பேசிவருகிறார்.

ஒரு முறை, "எனது தலைமையில் எல்லா போட்டிகளிலும் அரையிறுதி அல்லது இறுதி வரை அணி முன்னேறியது. அது யாருக்கும் தெரியவே இல்லை. கோப்பையை தவறவிட்டதை குற்றம் சாட்டுகின்றனர்" என்று கூறியிருந்தார்.

Virat Kohli: "நான் ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளேன்" மனம் திறந்த கோலி
Virat Kohli: இரண்டு ஆண்டுகளுக்கு பின் RCB கேப்டனான விராட் - இது தான் காரணமா?

தற்போது மீண்டும் மனம் திறந்துள்ள கோலி, தன் கேப்டன்சி காலத்தில் நிறைய தவறுகள் செய்ததாக கூறியுள்ளார்.

"நான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதறகு நான் வெட்கப்படவில்லை. ஆனால் நான் எடுத்த எந்த ஒரு முடிவும் என் தனிப்பட்ட நலனுக்காக நான் செய்தது கிடையாது. சுயநலமாக நான் நடந்துகொள்ளவில்லை. அணியின், அணி வீரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. அணியை முன் நகர்த்தி செல்ல என்ன செய்யவேண்டுமோ செய்தேன். அதில் தோல்விகள், சறுக்கல்கள் இருந்தன. ஆனால் எனது நோக்கம் தவறாக இருந்ததில்லை" என்று பேசியிருக்கிறார் கோலி.

அவர் அந்த சமயத்தில் சற்று ஃபார்ம் அவுட்டாகவும் இருந்தார். கோலியின் ஒரு சதத்திற்காக உலகமே 1000 நாட்களுக்கும் மேல் காத்திருந்தது. தனது 71வது சதமடித்த பிறகு மனைவி அனுஷ்காவுக்கு அழைத்து மனம் விட்டு அழுததாக தெரிவித்தார் கோலி. மேலும், தனது bad phaseல் தன்னை நிலையில் வைத்திருந்தது அனுஷ்காவின் அன்பும் அவரது வார்த்தைகளும் தான் எனவும் கூறியிருந்தார்.

Virat Kohli: "நான் ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளேன்" மனம் திறந்த கோலி
IPL 2023: விராட் கோலி டூ சஞ்சு சாம்சன் - ஐபிஎல்லில் இந்தியர்களின் அதிகபட்ச தனிபட்ட ஸ்கோர்!


2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனியின் அதிர்ச்சி ஓய்வுக்குப் பிறகு கோலி இந்திய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து தோனி விலகிய பிறகு கோலி பொறுப்பேற்றார். இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) 2013 முதல் 2021 வரை ஆர்சிபியை கோஹ்லி வழிநடத்தினார்.

2021 டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 கிரிக்கெட்டில் இருந்து ராஜினாமா செய்தார் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் கழித்து அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்த பிறகு, ஜனவரி 2022 இல் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சியிலிருந்து விலகினார். 2022 சீசனில் இருந்து ஆர்சிபிக்கு ஃபாஃப் டு பிளெசிஸ் பொறுப்பேற்றார்.

Virat Kohli: "நான் ஒரு கேப்டனாக நிறைய தவறுகள் செய்துள்ளேன்" மனம் திறந்த கோலி
"தோனி மட்டும் தான் என்னிடம் பேசினார்" - மனம் திறந்த விராட் கோலி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com