கம்போடியா அங்கோர் வாட் : கோவிலை சீரமைக்கும் பணியில் இந்தியா - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

அங்கோர் வாட் மற்றும் அதன் துணை நகரங்கள், கோவில்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அரண்மனைகள், 21 ஆம் நூற்றாண்டின் சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது.
India restoring Angkor Wat temple in Cambodia: Jaishankar
India restoring Angkor Wat temple in Cambodia: JaishankarTwitter
Published on

கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவில் வளாகம் இந்தியாவால் புதுப்பிக்கப்பட்டு வருவதாக காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அங்கோர்வாட் கோவில்

அங்கோர்வாட் பல நூற்றாண்டுகளாக யாரும் அறியப்படாத ஒரு புதையலாக புதைந்து இருந்தது.

1860ஆம் ஆண்டில் ஒரு பிரெஞ்சு ஆய்வாளர் இதை கண்டுபிடித்தார்.

அப்போது இந்தக் கோவில் சேதமடைந்து இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஓரளவு மறுசீரமைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Angkor Wat
Angkor WatTwitter

அதன் பிறகு இந்த அங்கோர்வாட் புகழ் உலகெங்கும் பரவியது. அங்கோர் வாட் மற்றும் அதன் துணை நகரங்கள், கோவில்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் அரண்மனைகள் 21 ஆம் நூற்றாண்டின் சுற்றுலாப் பயணிகளை காந்தம் போல ஈர்க்கும் அம்சமாக இருக்கிறது.

இன்றும் உலகெங்கும் இலட்சக்கணக்கான மக்கள் அங்கோர் வாட் கோவில் நகரத்தைப் பார்க்க வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வழியாகச் செல்லும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தண்ணீரைப் பயன்படுத்துவதால் நீர்நிலை அச்சுறுத்தப்படுகிறது. மேலும் மணல் சரிவு இந்த 12 ஆம் நூற்றாண்டு கோவிலின் கற்களைச் சேதப்படுத்துகிறது.

India restoring Angkor Wat temple in Cambodia: Jaishankar
கோனார்க் கோவில் சூரியக் கோயில் சிறப்புகள் என்ன? - அட்டகாச தகவல்கள்

இந்தியா செய்து வரும் பணிகள்

வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், உலகின் மிகப் பெரிய கோவிலான அங்கோர்வாட் குறித்தும் அங்கு இந்தியா செய்து வரும் பணிகள் குறித்தும் விளக்கினார்.

இது குறித்து ஜெய்சங்கர் கூறுகையில்,

நமது நாகரிகம் இந்தியாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பரவியுள்ளது.

இந்தியா மற்றும் இந்தியத் துணைக் கண்டங்களில் மட்டுமல்லாமல், அதையும் தாண்டி பல பகுதிகளில் இந்து கோயில்கள் உள்ளன

உலகின் மிகப் பெரிய கோவிலான அங்கோர் வாட் கோவிலை புனரமைத்து புதுப்பித்து வருகிறோம்.

இந்தியாவின் நாகரிகம் பல்வேறு இடங்களில் பரவி கிடக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

India restoring Angkor Wat temple in Cambodia: Jaishankar
சூரிய கோவில் அடையாளமாக சூரிய மின்சக்தி: 100% சோலாரில் செயல்படும் ஒரு அடடே கிராமம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com