Indian Army dog
Indian Army dogTwitter

குண்டடி பட்டும் நாட்டிற்காக போராடிய நாய் - பயங்கரவாதிகளை வீழ்த்தியது எப்படி?

இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சிபெற்ற நாய் ஒன்றை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.
Published on

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் உள்ள நாய் ஒன்று பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட பின்னரும் போராடி பாதுகாப்புப் படையினரிடம் அவர்களை பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

Indian Army dog
மூன்று குண்டுகள் துளைத்து இந்திய இராணுவத்தின் 2 வயதான நாய் மரணம் - என்ன நடந்தது?

இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சிபெற்ற நாய் ஒன்றை பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தனர்.

ஜூம் என்ற பெயரை கொண்ட அந்த நாய் ராணுவத்தினால் பயிற்சிப் பெற்றது.

இந்நிலையில், ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் மெதுவாக நுழைந்தது.

இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இரண்டு குண்டுகள் ஜூம்மின் உடலை துளைத்தது

இருப்பினும் அந்த நாய் பயங்கரவாதிகளை தாக்கியது. படுகாயங்களுடன் ஜூம் நாய் தற்போது ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது

இது குறித்து இந்திய ராணுவம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தது.

அந்த பதிவில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது 'ஜூம்' படுகாயமடைந்தது. விரைவில் குணமடைய வேண்டுகிறோம் என அவர்கள் தெரிவித்திருந்தனர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com