ஒரு நல்ல சேதி - ஊழியர்கள் சம்பளத்தை 10% உயர்த்த இந்திய நிறுவனங்கள் திட்டம்: காரணம் என்ன?

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் முடிவு யாரும் எதிர்பார்க்காத சில பிரச்னைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறது. நிறுவனங்களில் ஊழியர்கள் தாமாக முன்வந்து பணி விலகுவது அதிகரித்தது. பல துறைகளை சார்ந்த நிறுவனங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன.
salary
salaryTwitter
Published on

கொரோனா பரவல் முடிந்து கிட்டத்தட்ட அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலிருந்து பணி செய்ய அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வொர்க் ஃப்ரம் ஹோம் முடிவு யாரும் எதிர்பார்க்காத சில பிரச்னைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறது. கொரோனாவுக்கு முன்னதாக அலுவலகம் வந்து செல்லும் செலவு, மதிய உணவு செலவு, சிற்றுண்டி மற்றும் இதர வெளி செலவுகளுக்கு ஆகும் தொகை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

உலகளாவிய இந்த விலையேற்றம் சம்பள பற்றாக்குறை ஏற்பட காரணமாக இருந்தது. இதனால் ஊழியர்கள் ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணி செய்யும் நிறுய்வனங்களை நோக்கி முன்னேறினர்.

நிறுவனங்களில் ஊழியர்கள் தாமாக முன்வந்து பணி விலகுவது அதிகரித்தது.

பல துறைகளை சார்ந்த நிறுவனங்கள் மோசமான நிலையில் இருக்கின்றன.

இந்த நிலையில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் வில்லிஸ் டவர்ஸ் வாஸ்டன் என்ற நிறுவனம் 168 நாடுகளில் ஆய்வு மேற்கொண்டு ஊழியர்கள் ஊதியம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக்கு 590 இந்திய நிறுவனங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

ஆய்வு முடிவின் படி 2023 நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு 9.8% ஊதிய உயர்வு அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இது ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் அதிக பட்சமான ஊதிய உயர்வு.

salary
மதிய உணவில் கைவைத்த கொரோனா: Lunchflation குறித்து தெரியுமா?

சீனாவில் 6 விழுக்காடு, ஹாங்காங் 4 விழுக்காடு மற்றும் சிங்கப்பூர் 4 விழுக்காடு ஊதியம் அதிகரிக்கப்படும்.

தொழில்நுட்பம், நிதி சேவைகள், ஊடகம், கேமிங் ஆகியத் துறைகள் அதிக ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த 42 விழுக்காடு நிறுவனங்கள் மேம்பட்ட வருவாயைப் பெறும் என்றும் 7 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே சரிவிலிருக்கும் என்றும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது.

வில்லிஸ் டவர்ஸ் வாஸ்டன் கூற்றுப்படி ஊதியம் அதிகரித்தால் கொரொனாவுக்கு பிறகான மாசக்கடைசி பிரச்னைகள் குறையும்!

salary
Work from Home வரலாறு இதுதான் - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com