LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணை

உத்கர்ஷ் சக்சேனா என்ற இளைஞரும், அனன்யா கோட்டியா என்ற இளைஞரும் காதல்வயப்ப்பட்டிருந்தனர். ஆனால், வெளியில் சொல்லமுடியாத சூழ்நிலை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தங்கள் காதலை பரஸ்பரம் பரிமாற்றிக் கொண்டாலும், உலகம் ஏற்குமா என்ற அச்சத்தில் மறைந்தே வாழ்ந்தனர். நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது.
LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணை
LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணைட்விட்டர்
Published on

ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் எனக் கூறி வழக்கு தொடுத்துள்ளனர் அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இரு இந்திய இளைஞர்கள்.

உத்கர்ஷ் சக்சேனா அனன்யா கோட்டியாவின் நீண்ட நெடிய 15 வருட காதல் கதை நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மேற்கு உலகில் ஓரின் ஈர்ப்பாளர்கள் குறித்து, அவர்கள் காதல் குறித்து மக்கள் புரிந்துக் கொண்டு, ஏற்றுக்கொன்டு கொண்டாடத் தொடங்கியிருந்தனர். இந்தியாவில் அப்போது தான் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்த புரிதல்கள் வரத் தொடங்கியிருந்த காலம்.

உத்கர்ஷ் சக்சேனா என்ற இளைஞரும், அனன்யா கோtடியா என்ற இளைஞரும் காதல்வயப்ப்பட்டிருந்தனர். ஆனால், வெளியில் சொல்லமுடியாத சூழ்நிலை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தங்கள் காதலை பரஸ்பரம் பரிமாற்றிக் கொண்டாலும், உலகம் ஏற்குமா என்ற அச்சத்தில் மறைந்தே வாழ்ந்தனர். நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது.

இது மாறும், மக்களின் மனநிலை மாறி, சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளும் என்று பொறுமையாக காத்திருந்தனர்.

"நாங்கள் விளைவுகள் குறித்து எண்ணி மிகுந்த அச்சத்தில் இருந்தோம்" என்கிறார் தற்போது ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலையில் பொதுக் கொள்கை அறிஞர்(Public Policy Scholar) ஆக பணியாற்றிவரும் உத்கர்ஷ்.

LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணை
தன்னை தானே திருமணம் செய்ய இருக்கும் இந்திய பெண் - என்ன சொல்கிறார் தெரியுமா?
LGBTQ
LGBTQPexels

முதலில் தங்களுக்குள்ளயே இருந்த பயங்களை, தயக்கங்களை கையாள கடினமாக இருந்தது என்று கூறும் இவர்கள், "நாங்கள் மிகவும் பலவீனமான மனநிலையில் இருந்தோம். சமூகத்தின் பார்வை எங்களை எந்த தருணத்திலும் உடைத்துவிடக் கூடாது என்று நினைத்தோம்" என்றனர்

இந்தியாவிலும், எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரை மக்கள் ஏற்கத் தொடங்கினர். பலரும் தங்கள் பாலின ஈர்ப்புகளை குறித்து, அச்சமின்றி, வெளிப்படையாக உலகுக்கு அறிவித்தனர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் உறவு இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப் பூர்வமாக்கப்பட்டது. ஆனால் இவர்களின் திருமணமோ, இவர்கள் குழந்தைப் பெற்றுக்கொள்ளவோ, சொத்துகள் வாங்கவோ சட்டரீதியாக இன்னும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்கர்ஷ் அனன்யா இணை, தங்களது காதல் குறித்து குடும்பத்தாரிடம், நெருங்கிய நண்பர்களிடம் கூறினர். பெரும்பாலானோர், தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டதாக உத்கர்ஷ் சொல்கிறார்.

இவர்கள் காதலிக்கத் தொடங்கி 15 வருடங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தங்களது உறவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் வசித்து வரும் உத்கர்ஷ் மற்றும் அனன்யா, திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.

இதனையடுத்து, இந்தியாவில் ஓரின்ச் சேர்க்கையாளர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது இந்த இணை. இவர்களுடன் இன்னும் மூன்று ஜோடிகளும் மனுதாக்கல் செய்துள்ளனர். மார்ச் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பூர்வமாக்கப்பட்டால், இந்தியா ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை ஏற்கும் இரண்டாவது ஆசிய நாடாகும். தைவான், இதற்கு முன்னர் இந்த திருமணத்தை சட்டமயமாக்கியது.

காதலுக்கு எப்படி மத, மொழி, நிற பேதங்கள் இல்லையோ, பாலின வேறுபாடுகளும் இல்லை தானே?

LGBTQ: "ஓரினசேர்க்கையாளர் திருமணத்தை சட்டப் பூர்வமாக்க வேண்டும்" வழக்கு தொடுத்த இந்திய இணை
Pride Month : 'LGBTQ' - கட்டுக்கதைகளும் உண்மைகளும்- எளிய விளக்கம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com