Pride Month : 'LGBTQ' - கட்டுக்கதைகளும் உண்மைகளும்- எளிய விளக்கம்

இப்போது சற்றே வெளிப்படையாக பேசப்படும் ஓரினச்சேர்க்கை பற்றிய புரிதல், 50 ஆண்டுகளுக்கு முன் என்னவாக இருந்திருக்கும்? நிச்சயம் முகத்தைச் சுழித்திருப்பார்கள். வெளியில் சொல்லிவிடக்கூடாததாக மறைந்து காதலித்திருப்பார்கள். இன்றுவரை பலரும் அப்படி எண்ணிக்கொண்டிருப்பது தான் அவலம்.
LGBTQ
LGBTQTwitter
Published on

50 ஆண்டுகளுக்கு முன் ஓரினச்சேர்க்கை என்பதைப் பற்றிய புரிதல்கள் என்னவாக இருந்திருக்கும்? நிச்சயம் முகத்தைச் சுழித்திருப்பார்கள். வெளியில் சொல்லிவிடக்கூடாத பழக்கமென மறைந்து மறைந்து காதலித்திருப்பார்கள். சில செக்ஸ் புத்தகங்களில் அது குறித்துப் படித்திருப்பார்கள். அதற்காகச் சிலர் எழுதியிருப்பார்கள் எல்லாம் மறைமுகமாக. காதுகளில் மிக ரகசியமாக ஓரினச் சேர்க்கை குறித்துப் பேசியிருப்பார்கள். அவற்றில் அதிகம் கட்டுக்கதைகளாக இருக்கும். ஓரினச் சேர்கையை ஒரு நோய் போலச் சித்தரித்திருப்பார்கள். அன்று மட்டுமல்ல இன்றுவரை பலரும் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கை குறித்த உண்மைகளையும் கட்டுக்கதைகளையும் சில எளிமையான படங்கள் மூலம் அறியலாம்.

Myth vs Reality
Myth vs RealityNews Sense

இது இயற்கைக்கு மாறானது

உலகில் சூரியன் உதிப்பதும் மறைவதும் எப்படி சாதாரணமானதோ அது போன்று சாதாரணமானது தான் ஓரினச்சேர்க்கையும். இடதுகை பழக்கம் இருப்பவர்கள் இயற்கைக்கு மாறானவர்கள் என்று கூறுவோமா? அதுபோல இயற்கையாக அமைவது தான் பாலினமும். சிலர் திருநங்கையாக, சிலர் ஓரினச்சேர்கையாளராக பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள்!

Myth vs Reality
Myth vs RealityNews Sense

இது ஒரு நோய்

ஓரினச்சேர்க்கையை நோய் என வாதாடுபவர்கள் ஏதாவது மருத்துவர்கள் அப்படிக் கூறிய தரவுகளைக் காண்பிக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஏனெனில் மருத்துவர்களும், அறிவியல் சமூகமும் இது ஒரு நோய் இல்லை என்று தெளிவாகக் கூறுகின்றனர். மருந்துகளோ, சித்தா சிகிச்சைகளோ, யோகாவோ வேறெதுவோ ஓரினச்சேர்க்கையைச் சரி செய்ய முடியாது. நோயே அல்லாததை எப்படிச் சரி செய்ய நினைப்பீர்கள்?

Myth vs Reality
Myth vs RealityNews Sense

LGBTQ ஒரு உளவியல் நோய்

மன்னிக்கவும். இது ஒரு உளவில் நோய் என்று கருதுகிறீர்களா? உறுதியாக நம்புகிறீர்களா? ஆம் எனில் நீங்கள் ஒரு நல்ல உளவியல் மருத்துவரை அனுக வேண்டும். உங்களுக்குத் தான் உளவியல் நோய் இருக்கிறது அதன் பெயர் ஹோமோஃபோபியா

Myth vs Reality
Myth vs RealityNews Sense

இது அருவருப்பானது

நீங்கள் இதனை அருவருப்பானதாகக் கருதுகிறீர்களா? உங்களால் உங்கள் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலிக்க முடியாதா? அப்படி எனில் நீங்கள் அதனைச் செய்ய வேண்டாம். மற்றவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள்.

Myth vs Reality
Myth vs RealityNews Sense

இதனால் எய்ட்ஸ் பரவும்!

HIV பரவ பல காரணங்கள் இருக்கிறது. பல்வேறு வகையில் எய்ட்ஸ் பரவுகிறது. எய்ட்ஸிலிருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் எய்ட்ஸ் ஆண்-பெண் உறவு வைத்துக்கொள்பவர், ஓரினச் சேர்க்கையாளர் என்று பாரபட்சம் பார்ப்பதில்லை.

Myth vs Reality
Myth vs RealityNews Sense

ஓரினச்சேர்க்கை என்பது அவரவர்களின் தேர்வு

நிச்சயம் இல்லை. நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? வெள்ளையாக? உயரமாக அல்லது குள்ளமாக? உங்கள் உடலமைப்பை நீங்கள் எப்படித் தேர்வு செய்தீர்கள்? எதாவது கடைகளில்? உடலமைப்பைப் போலத் தான் பாலினமும் நீங்கள் தேர்வு செய்துகொள்ள முடியாது.

LGBTQ
Sex Strike : உள்நாட்டு போர்களை நிறுத்திய பெண்களின் செக்ஸ் நிறுத்தம் - ஓர் ஆச்சர்ய வரலாறு!
Myth vs Reality
Myth vs RealityNews Sense

ஓரினச்சேர்க்கை ஒரு பாவம்

நாம் தினசரி கடவுளிடம் எத்தனையோ கேள்விகளை அடுக்குகிறோம். எல்லா கடவுள்களும் அன்பை மட்டும் தானே பதிலாகத் தருகிறார்கள். அன்பை உறுதியாக விடாப்பிடியாக நம்பும் கடவுள் அவர் படைத்த குழந்தைகளில் ஒருவர் மற்றொருவரை அன்பு செய்வதற்காக வெறுப்பார் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

Myth vs Reality
Myth vs RealityNews Sense

என்ன இருந்தாலும் ஓரினச்சேர்கையாளர்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது?

இப்போது ஒரு கேள்வியை முன் வைக்கிறேன். ஆண் - பெண் தம்பதியினர் எல்லாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிகிறதா? இல்லை எனில் எல்லாராலும் குழந்தையை வளர்க்க முடியும். தத்தெடுப்பின் வாயிலாக! ஓரினச்சேர்க்கை தம்பதி தங்களுக்காக ஒரு குழந்தையை வேண்டினால் அவர்களால் தத்தெடுத்துக்கொள்ள முடியும்.

LGBTQ
LIC IPO: கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
Myth vs Reality
Myth vs RealityNews Sense

ஓரினச்சேர்க்கை பரவக்கூடும்

ஓரினச்சேர்கையாளர்களுடன் இருந்தால் ஓரினச்சேர்கையாளராக மாறமுடியும் என்றால், ஆண் - பெண் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு மத்தியில் வாழும் ஓரினச்சேர்கையாளர்கள் அவர்களைப் போல மாறிவிடுவார்களா?

Myth vs Reality
Myth vs RealityNews Sense

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் அனைவரும் ஓரினச்சேர்கையாளர்களே

எனில், விலங்குகள் நலனை ஆதரிப்பவர்கள் நாய்க்குட்டிகளா? LGBTQ சமூகத்தினர் அவர்களின் உரிமைகளுக்காகவும், சுய மரியாதை மற்றும் சமத்துவத்தைக் காக்கவுமே போராடுகிறார்கள். அவர்களுடன் இணைந்து அனைத்து பாலினத்தவர்களும் போராடுகிறார்கள்.

LGBTQ
எலான் மஸ்க்: சிறு வயதில் மோசமான நெருக்கடிகள் முதல் உலகின் No 1 பணக்காரர் வரை - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com