சுற்றுலா என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது வித விதமான உணவுகள் தான். எங்கு என்ன கிடைக்கும், எந்த ஊரில் என்ன உணவு ஃபேமஸ் என்ற டேட்டா பேஸ் இருந்தால், அதை விட சிறந்த பயணம் ஒன்று இருக்குமா என்றால்? பதில் இல்லை.
உணவு என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது இந்தியா தான்! பல வித மக்கள், எண்ணிலடங்கா கலாச்சாரங்கள், தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் இதில் அடங்கும்.
தமிழகத்தில் இட்லி சாம்பார், கர்நாடகா என்றால் மசாலா தோசை, வட மாநிலங்களில் பால் வகை இனிப்புகள் இப்படி வெரைட்டிகள் ஏராளம்..
இவற்றை தவிர, இந்தியாவின் ஒரு சில ரயில் நிலையங்களிலும், சில சிக்னேச்சர் உணவு வகைகள் பிரபலம். அவை என்ன? இந்த கட்டுரையில் பார்க்கலாம்
மைதா மற்றும் கோதுமை மாவினால் தயாரிக்கப்டும் பூரிக்கு சைட் டிஷ் காரசாரமான மசாலாக்கள் நிறைந்த சன்னா. சுடச் சுட கிடைக்கும் இந்த சோலே பட்டூரேவுக்கு கூட்டம் அலைமோதும். ஜலந்தர் ரயில் நிலையம் சென்றால் நிச்சயம் சாப்பிட்டு வாருங்கள்
தென் இந்தியாவின் இன்றியமையாத உணவு இணை இட்லி - வடை! ஆந்திராவின் விஜயவாடா ரயில் நிலையத்தில் கிடைக்கும் சூடான பருப்பு வடை மற்றும் பஞ்சு போன்ற இட்லியை ருசிப்பதற்காவே பயணிகள் வருகிறார்கள். இதனை உங்கள் பக்கெட் லிஸ்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள்
”மசால் வட மசால் வட தான் யா” என்று வடிவேலு சொல்வது போல திருப்பதிக்கு செல்லும் வழியில் ரெனிகுண்டா ரயில் நிலையத்தில் கிடைக்கும் மொறு மொறுப்பான மசாலா வடை மிகவும் பிரபலம். உண்ணும்போது அங்கங்கு தட்டுப்படும் வெங்காய துண்டுகளுக்காகவே இது ஃபேம்ஸ் ஆம்!
காரசாரமாக சாப்பிட்டது போதும்..கொஞ்சம் ஸ்வீட்டா எதாச்சும் இருக்கா என்று கேட்கிறீர்களா?
அப்படியெனில், கோழிக்கோடு ரயில் நிலையத்தில் கிடைக்கும் கோழிக்கோடான் அல்வாவை சுவைத்துப் பாருங்கள். தேங்காய் எண்ணெய்யும், அல்வாவுக்கே உரித்தான நெய்யை ஊற்றி செய்யப்படும் இந்த அல்வாவில், அவ்வப்போது நறுக் நறுக் என்று தட்டுப்படும் பாதாம் பிஸ்தா கூடுதல் சுவை
என்ன தான் உப்புமாவை கண்டு நாம் தெறித்து ஓடினாலும், ரட்லம் ரயில் நிலையத்தில் கிடைக்கும் போஹாவை சாப்பிட்டால், மனம் மாறிவிடும். அவலால் செய்யப்படும் இந்த உப்புமாவில், வேர்க்கடலை எல்லாம் சேர்க்கப்பட்டு, காரசாரமாக இருக்கும்...மழைக்காலத்தில் அருகில் ஒரு கப் டீயுடன் இதை சேர்த்து சாப்பிட்டால்...
பாலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை ரப்ரி. பாதாம், பிஸ்தா, குங்குமப் பூ நிறைந்த இதனை தனியாக சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும், குலாப் ஜாமுன், ஜிலேபி, மால்புவா என மற்ற இனிப்பு வகைகளின் மேல் ஊற்றி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். ராஜஸ்தானின் அபு ரோட் ரயில் நிலையத்தில் இது கிடைக்கிறது
இந்தியாவின் பிரபலமான மசாலாக்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த உருளைக்கிழங்கு ஃப்ரை மிகவும் ஃபேம்ஸ்
உலகிலேயே அதி சுவையான வடை இது தான் என்று முடிசூடா மன்னனாக திகழ்கிறது இந்த மத்தூர் வடை. வடை என்பதை விட, கர்நாடகா பாணியில், மத்தூர் வடே என்றழைத்தால் தான் இன்னும் சிறப்பாக இருக்கும். அரிசி மாவு, தேங்காய், ரவை, மைதா உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த சிற்றுண்டிக்கு, உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர்
பழம்பொரி, அல்லது வாழைப்பழம் கொண்டு தயாரிக்கப்படும் பஜ்ஜி. இனிப்பும், காரமும் சேர்ந்த கலவையான இதன் சுவைக்கு ஈடு எதுவும் இல்லை என்கின்றனர் இதனை உண்டவர்கள்.
பஞ்சாப்பில் மட்டுமல்ல, டெல்லியின் இந்த ரயில் நிலையத்திலும் சோலே பட்டூரே ஃபேம்ஸ். வட மாநிலத்தவர்களின் பிரதான உணவு வகைகளில் இதுவும் ஒன்று.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust