IIT மாணவருக்காக Cab புக் செய்த இந்தியன் ரயில்வேஸ் - என்ன காரணம் தெரியுமா?

சத்யம் காத்வி என்பவர் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் கல்லூரி வருவதற்காக ஏக்நாத் நகரிலிருந்து வடோராவுக்கு ரயில் புக் செய்திருக்கிறார். ஆனால் ஏக்நாத் நகரில் இருந்து செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது.
Student
StudentTwitter
Published on

ஐஐடி சென்னையில் படித்து வரும் குஜராத் மாணவருக்காக ஏக்நாத் நகர் முதல் வடோரா வரை இந்தியன் ரயில்வேஸ் வாடகை கார் புக் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதற்காக இந்தியன் ரயில்வேஸ்க்கு நன்றி தெரிவித்து அந்த மாணவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சத்யம் காத்வி என்பவர் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். இவர் கல்லூரி வருவதற்காக ஏக்நாத் நகரிலிருந்து வடோராவுக்கு ரயில் புக் செய்திருக்கிறார்.

ஆனால் மழை வெள்ளம் காரணமாகத் தண்டவாளம் பழுதடைந்ததால் ஏக்நாத் நகரில் இருந்து செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. எனினும் அந்த ஒரு மாணவர் மட்டும் உடனடியாக வடோரா சென்று அங்கிருந்து ரயிலைப் பிடிக்க வேண்டிய அவசியம் இருந்துள்ளது.

இதனால் ரயில்வே ஊழியர்கள் காத்விக்காக ஒரு காரை புக் செய்து அவரை அனுப்பி வைத்திருக்கின்றனர். இதனால் சரியான நேரத்தில் அவர் வடோரா சென்றடைந்து அங்கிருந்து சென்னை வரும் ரயிலைப் பிடித்துள்ளார்.

தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவிய ரயில்வே ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த மாணவர் வெளியிட்ட வீடியோ,

Student
உங்களை பிரமிக்க வைக்கும் 7 இந்திய ரயில் பாதைகள் - நிச்சயம் போய் பாருங்க!

அந்த வீடியோவில் ரயில்வே ஊழியர்களின் அக்கறையை பாராட்டிய மாணவர் அவர்கள் ஒவ்வொரு பயணிக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. எனக் கூறியுள்ளார்.

"அத்துடன் கார் ஓட்டுநரும் வரோடா ரயில் நிலையத்துக்கு சரியான நேரத்துக்கு செல்ல வேண்டும் என்பதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு அங்குக் கொண்டு சேர்த்தார்." என வீடியோவில் கூறியுள்ளார் அந்த மாணவர்.

இது மட்டுமில்லாமல் வரோடா நிலைய ஊழியர்களும் மாணவரை வரவேற்க காத்திருந்தனராம். அவர் நடைமேடையைத் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் அவர்களே அழைத்துச் சென்றார்களாம். அவரது சுமைகளைக் கூட தூக்கிவந்து அவரை சரியான நேரத்தில் ரயிலில் ஏற்றிவிட்டார்களாம்.

மாணவரின் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் இந்தியன் ரயில்வேஸை பாராட்டியுள்ளனர்.

Student
விவேக் எக்ஸ்பிரஸ் : 4273 கி.மீ, 55 நகரங்கள், 3 நாள் - இந்தியாவின் நீண்ட ரயில் வழித்தடம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com